கொடிநாள் வசூலில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடத்தை வகிக்கிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரன்.
மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
சிறப்புமிக்க பணியாற்றும் ராணுவ வீரர்களின் தியாகத்துக்கும், தன்னலமற்ற சேவைக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 7.367 முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கும்,. நாட்டுக்காக போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர் மறுவாழ்விற்கும், எதிரிகள் மற்றும் தீவிரவாதிகளுடன் போரிடும்போது உயிரிழந்த மற்றும்உடல் ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனுக்காகவும் இத்தொகை செலவிடப்படுகிறது.
கடந்தாண்டில் மட்டும் ரூ.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடந்தாண்டில் அரசு நிர்ணயித்த இலக்கான ரூ.33 லட்சத்தையும் தாண்டி, ரூ. 2.28 கோடி தொகை மாவட்டத்தில் வசூலிக்கப்பட்டது என்றார் மாவட்டஆட்சியர்.
முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கொடிநாள் வசூலில் அதிக நிதி வசூலித்த அரசுத் துறைத் தலைமை அலுவலர்களுக்கு கேடயங்களை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிபதி ஏ.பி. பாலச்சந்திரன் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியது: தன்னலம்பாராமல் நாட்டுக்கு உழைத்த படைவீரர்கள்
தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக மாவட்ட நிர்வாகத்தை அணுகி பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்றார் மாவட்ட முப்படைவீரர் வாரிய துணைத் தலைவர் பி. நாராயணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் க. தர்ப்பகராஜ், மாநகராட்சி ஆணையர் வே.ப.தண்டபாணி, திட்ட இயக்குநர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சோ. செல்வமூர்த்தி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குநர் க. முத்துசாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment