திருச்சி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியம் ஆண்டு வருமான உச்ச வரம்பை தாண்டியிருந்தால் வருமான வரி கணக்கு ஒப்படைக்க வருகிற 10ம் தேதி கடைசி நாளாகும்.
திருச்சி மாவட்ட கரு வூல அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓய்வூதியதாரர்களின் வயது 60க்குள் இருந்தால் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சமாகும். 60 வயதிற்குமேல் 80 வயதிற்குள் இருக்கும் ஓய்வூதியதாரரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 லட்ச மும், 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமும் இருக்க வேண் டும்.
இந்த வருமான உச்சவரம்புக்கு மேல் ஆண்டு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண் (பேன் கார்டு நகல்) சேமிப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிதியாண் டில் தங்களால் நேரடியாக வருமான வரி செலுத்தப்பட்டிருப்பின் அதன் விவரங்களை வருகிற 10ம் தேதிக் குள் மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூலங்களில் அளிக்க வேண் டும்.
அவ்வாறு குறிப்பிட்ட காலகெடுவிற்குள் அளிக்காமல் தவறும்பட்சத்தில் தாங்கள் பெறும் ஓய்வூதியத் தின் அடிப்படையில் சேமிப்பு எதுவும் இல்லை யென கருதி வருமானவரி பிடித்தம் செய்யப்படும். மேலும் நிரந்தர கணக்கு எண் (பேன் நம்பர்) இல்லாதவர்களுக்கு நேரடியாக 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
No comments:
Post a Comment