Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 3 February 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது: விரைவில் அறிவிப்பு


மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களும் சுமார் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.இரண்டாவது முறையாக இரட்டை இலக்கத்தில் அகவிலைப் படி உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்தது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 90 சதவீதம் அளவிற்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது.இது பற்றி அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பூர்வாங்க மதிப்பீடு அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்திற்கும் குறையாது என்றும் இந்த உயர்வு இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்பொருள் விலை குறியீடு (சிபிஐ-ஐடபிள்யு) புள்ளி விவரம் பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்படும். இந்த குறியீடு புள்ளி விவரம் கிடைத்ததும் அதன் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படும். அப்போதுதான் சரியான அகவிலைப்படி சதவீதம் எவ்வளவு என்று தெரியவரும் என்றும் அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.டிசம்பர் மாதத்திற்கு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்பொருள் விலை குறியீடு பணவீக்கம் பற்றிய பூர்வாங்க புள்ளிவிவரத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிட்டது. பணவீக்கம் 9.13 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் நுகர்பொருள் விலை குறியீடு பணவீக்கம் பற்றிய புள்ளிவிவரத்தை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு முடிவு செய்கிறது. எனவே, கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையில் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான நுகர்பொருள் விலை குறியீடு பணவீக்கம் எவ்வளவு என்பதை கணடறிந்து அதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்ற விவரம் வெளியிடப்படும். இந்த முறை அகவிலைப்படி உயர்வு 10 சதவீதமாக இருக்கும் என்றும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.கே.என். குட்டி தெரிவித்தார்.

அகவிலைப்படி உயர்வு 100 சதவீதத்தை எட்டியதும், ஊழியர்களின் ஊதிய விகிதம் சீரமைக்கப்படும். அதாவது அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து புதிய ஊதிய விகிதத்தை மத்திய அரசு அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தற்போது உள்ள நடைமுறைப்படி, அகவிலைப்படி உயர்வு 50 சதவீதத்தை தாண்டியதும், அகவிலைப்படி, ஊழியரின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் சேர்த்தால், ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப பிற அலவன்ஸ்கள் கிடைக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் கமிஷன் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அறிவிப்போடு நின்றுவிட்டது. ஊதிய கமிஷன் அமைக்கப்படவில்லை. ஊதிய கமிஷன் அமைத்தால்தான் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மத்திய அர சிடம் குட்டி தெரிவித்துள்ளார்.இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு போதுமானதாக இல்லை. ஏனெனில், 2014 ஜனவரி 1 நிலவரப்படி, நடைமுறையில் வாழ்க்கை செலவு சுமார் 300 சதவீதம் அதிகமாக உள்ளது. ஆனால், 100 சதவீதம் அளவுக்கு தான் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் குட்டி தெரிவித்தார்.

No comments:

Post a Comment