Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 21 February 2014

பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 26ம் தேதி வேலைநிறுத்த போராட்டம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு


சென்னை யில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், அறிவித்தபடி வரும் 26ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. 
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியருக்கும் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வரும் 25ம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம், 26ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னையில் தொடக்க கல்வி இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடந்தது. 
இதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் கூறுகையில், தொடக்கக்கல்வி இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் நிதிநிலை சார்ந்ததாக இருப்பதால் தமிழக முதல்வர் , செயலர் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். எனவே தற்போது போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.  தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஊதிய பிரச்னையினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ஏராளமான நிதியை ஒதுக்கியுள்ளது. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது இதற்கு தேவைப்படும் நிதியளவு குறைவுதான். இருந்தாலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. எனவே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த போராட்டத்தில் எங்கள் சங்கத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளோம் என்று கூறினார்.
முன்னதாக அனைத்து மாவட்டங்களிலும், வட்டாரங்களிலும் போராட்ட ஆயத்த கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள தாக மாநிலத்தலைவர் காம ராஜ், பொதுச்செயலாளர் ரங்கராஜ், பொருளாளர் ஜோசப் சேவியர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment