Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 15 February 2014

"டிவி' பார்ப்பதை தவிர்ப்பது மிக அவசியம் : பிளஸ் 2 மாணவிகளுக்கு சி.இ.ஓ., அறிவுரை

பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்கள் டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சி.இ.ஓ., மார்ஸ் அறிவுரை கூறினார்.கச்சிராயபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.கச்சிராயபாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.

இதில் பிளஸ் 2 வகுப்பில் 225 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு சி.இ.ஓ., மார்ஸ் மற்றும் டி.இ.ஓ., தனமணி ஆகியோர் நேற்று காலை திடீரென ஆய்வு செய்தனர்.பள்ளியில் பொதுத்தேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவிகளிடம் சி.இ.ஓ., மார்ஸ் பேசுகையில், ாவட்டத்தில் 16 அரசு பெண்கள் பள்ளிகளில் உள்ள 4,700 மாணவிகள் உட்பட மற்ற பள்ளிகளைச் சேர்ந்த 37 ஆயிரம் மாணவிகள் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதவுள்ள அனைவரும் டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். நேரத்தை முறையாக பயன்படுத்தி அதிக மதிப்பெண் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment