மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் அருகே வினோபா பவே நகரில் உள்ள காஷ்மிர் வித்யா மந்திர் என்ற பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த 7ஆம் வகுப்பு மாணவன் மீது ஓழுங்கினமாக நடந்துகொண்டதாக கூறி சிறுவனின் பெற்றோரை அழைத்து பள்ளி நிர்வாகம் எச்சரித்து டிசி கொடுக்க முடிவு செய்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த‘அச்சிறுவனின் பெற்றோர் இனிமேல் இதுபோன்ற தவறுநடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம் என்று பள்ளி நிர்வாகத்தினரிடம் கெஞ்சினர். எனினும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளதா தலைமை ஆசிரியை, உடனடியாக பள்ளி மாற்று சான்றிதழை (டி.சி.) தயாரித்தார்.
பள்ளியை விட்டு நீக்கியதோடு மட்டும் நின்று விடாமல், அந்த டி.சி.யின் ஓரமாக ‘இந்த பையன் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவன்’ என்ற குறிப்பையும் எழுதி கையொப்பமிட்டு தந்துள்ளார். இதனால், அவனை வேறு பள்ளியில் சேர்க்க முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டனர்.
இந்த தகவல் ஒரு ஆங்கில நாளிதழில் செய்தியாக வெளிவந்தது. இதனையடுத்து, மகாராஷ்டிர மாநில அரசின் பள்ளி கல்வி துறை உடனடியாக விசாரணை நடத்தி காஷ்மிர் வித்யா மந்திர் பள்ளியின் தலைமை ஆசிரியை நுட்டன் ஜன்கம் என்பவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மாணவனை வாழ்க்கையை இருட்டாக்கிய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.
பள்ளி மாணவனின் வாழ்க்கையை தலைமை ஆசிரியர் ஒருவர் இருட்டாக்க முயன்ற சம்பவத்தில் பள்ளி நிர்வாகமும் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment