Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 23 February 2014

மார்ச் முதல் வாரத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்?


மார்ச் முதல் வாரத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தொடர்பாக, சென்னையில், பிப்., 28ல், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் ஆலோசனை நடத்துகிறார். லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இது குறித்து, மாவட்டங்களில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பாக, சென்னையில், பிப்., 28ல், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் ஆலோசனை நடத்துகிறார். தேவையான ஓட்டு இயந்திரங்கள், பதற்றமான ஓட்டுச் சாவடிகள், பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, ஆலோசிக்கப்படும். தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "கலெக்டர்களின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த ஓரிரு நாளில், தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது' என்றார்.

No comments:

Post a Comment