Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 February 2014

சத்துணவு ஊழியர் மாநில மாநாடு: எழுச்சி முழக்கங்களுடன் துவங்கியது


தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 12 வது மாநில மாநாடு வெள்ளிக்கிமையன்று திருவண்ணாமலையில் துவங்கியது. வேங்கிக்கால் வேலூர் ரோடு, அண்ணாமலை மஹாலில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் கு.சக்தி அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார்.வரவேற்பு குழு தலைவரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான என்.சேகர் வரவேற்றார். முன்னதாகசத்துணவு ஊழியர் சங்கத்தின்கொடியை மாநிலத் தலைவர் பழனிச்சாமியும், அரசு ஊழியர் சங்கத்தின் கொடியை அதன் மாநிலச் செயலாளர் மு.அன்பரசு, அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் கொடியை அதன் பொதுச் செயலாளர் இரா.முத்துசுந்தரம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து மாநாட்டை துவக்கி வைத்து இரா.முத்து சுந்தரம் பேசியதாவது:-
கடந்த காலங்களில் மதிய உணவுத் திட்டமாக இருந்த திட்டம் சத்துணவு திட்டமாக அறிவிக்கப்பட்ட பின்பு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே அந்த பணிகளை செய்து வந்தனர். அதன் பிறகு ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பிறகு குரளமுது ஆசிரியர்கள் என்று தனியாக ஊழியர்களை நியமித்தது அரசு. அவர்களுக்கு உதவியாக சமையலரும், உதவியாளரும் நியமிக்கப்பட்டனர். அப்போது ஆசிரியர்களுக்கு சம்பளமாக ரூ.150 ம், சமையலருக்கு ரூ.60 ம், உதவியாளருக்கு ரூ.30 ம் வழங்கப்பட்டது.
எப்படியும் தங்களுக்கு ஒரு நிரந்தர அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் அந்த பணியில் ஈடுபட்டனர். ஆனால், 32 ஆண்டுகளுக்கு பிறகும், அவர்களின் நம்பிக்கை என்பது கோரிக்கையாகவே உள்ளது வேதனைக்குரிய விஷயமாகும்.கொத்தடிமை நிலையில் இருந்த சத்துணவு ஊழியர்களை ஒன்று திரட்டி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க போராட்டத்தை துவக்கியவர், அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த எம்.ஆர்.அப்பன்.
சத்துணவு ஊழியர்கள் நடத்திய மகத்தான போராட்டங்களின் விளைவாக 2003 ல் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் ஓய்வூதியம் என்பது வழங்கப்பட்டது. வாராந்திர விடுமுறைஅளிக்கப்பட்டது. பல ஊழியர்கள் பணி மாறுதலில் ஆசிரியர்களாகபணியமர்த்தப்பட்டனர்.பல்வேறு அரசு துறைகளில் தணிக்கை ஆய்வு என்ற பெயரில் அந்த துறையில் உள்ள உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்துவர். ஆனால், சத்துணவு துறையில் சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, வட்டாட்சியர் என ஏராளமான துறைகளின் சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாறாக சத்துணவு கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படவில்லை.
ஊரில் உள்ள குழந்தைகள் சத்துணவு சாப்பிட உழைக்கும், சத்துணவு பணியாளர்களின் வீட்டு குழந்தைகளும் உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம், ஆட்சியாளர்களுக்கு வரவில்லை. நாட்டில் நிதிப்பற்றாக்குறை உள்ளதாக செய்தி வெளியாகிறது. மறுபுறம், ஏராளமான கோடி ரூபாய் பெரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேகநாதன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் சுந்தரம்மாள் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் மு.அன்பரசு, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர்கள் பேயத்தேவன், வைத்தியநாதன், சொர்ணம் உள்ளிட்டநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கி.அகோரம், மாவட்ட தலைவர் எம்.தங்கராஜ், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.மாலையில், விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் அய்யம்மாள் தலைமை தாங்கினார்.
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் எம்.கிரிஜா கருத்துரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் கே.ஆண்டாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment