Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 4 February 2014

தகுதித்தேர்வு ரத்து செய்யக்கோரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பேரணி


ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட 7 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி திருச்சி யில் ஆசி ரியர் இயக்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் பேரணி நடத்தி னர்.
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத் திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக் கும் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்ய வேண் டும். தொடக்க கல்வி யில் தமிழ்வழி கல்வி முறை யை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும் தொடக்க கல்வி ஆசி ரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோரிக்கை பேரணி நேற்று நடந்தது. 
திருச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் வெஸ்ட்ரி பள்ளியில் துவங் கிய பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட் டணி மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், ராஜசேகரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செய லாளர் தாமஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநகர செயலாளர் சைவ ராசு, புறநகர் மாவட்ட செய லாளர் பொன்னுசாமி முன் னிலை வகித்தனர். இதில் திரளான ஆசிரியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்று கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment