Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 10 February 2014

டாக்டர்கள் கொட்டை எழுத்துகளில் மருந்து சீட்டு எழுத விரைவில் சட்டம்


மருந்து சீட்டுகளை டாக்டர்கள் கொட்டை எழுத்துகளில் எழுதுவதற்கான சட்டம் விரைவில் வர உள்ளது.நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள், அவர்களுக்கான மருந்துகளை துண்டு சீட்டில் எழுதி கொடுப்பார்கள். ஆங்கிலத்தில் இதை ‘பிரிஸ்கிரிப்ஷன்’ என்று அழைக்கின்றனர். இதில் எழுதப்படும் கையெழுத்து யாருக்கும் புரியாத வகையில் இருப்பது சகஜமான ஒன்று. இதனால், சில நேரங்களில் மருந்து கடைக்காரர்கள் குழப்பம் அடைந்து, டாக்டர் எழுதி கொடுக்கும் மருந்துக்கு பதிலாக அதே போன்ற உச்சரிப்பு கொண்ட வேறு மாத்திரை, மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பதால் பெரிய ஆபத்துகள் ஏற்படுகின்றன.

நோயாளிகளின் உயிருடன் விளையாடும் எமனாக, இதுபோன்ற கிறுக்கல் மருந்து சீட்டுகள் கருதப்படுகின்றன. இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் வருகின்றன. இதையடுத்து, எல்லாருக்கும் புரியும் வகையில், மருந்து சீட்டுகளை டாக்டர்கள் கொட்டை எழுத்துகளில் (கேபிடல் லெட்டர்) எழுத சட்டம் கொண்டு வரும்படி பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், நகல் அறிவிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்து விட்டது.

தற்போது, இந்த அறிவிக்கை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு இந்த அமைச்சகம் அனுமதி அளித்தால், மருந்து சீட்டுகளை கொட்டை எழுத்துகளில் எழுதும் சட்டம் நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரும். இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் சுகாதார அமைச்சகமும் ஆர்வத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரம், இந்த நடைமுறைக்கு டாக்டர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஏராளமான நோயாளிகளை டாக்டர்கள் பரிசோதித்து, மருந்து எழுதி கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுபோன்ற நேரத்தில் கொட்டை எழுத்துகளில் மருந்து சீட்டை எழுதினால் அதிகளவில் நேரம் வீணாகும் என்றும், இதனால் டாக்டர்களுக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment