Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 15 February 2014

பொதுத்தேர்வுக்கு வழிகாட்டும் கையேடு- பள்ளி கல்வித்துறை வெளியீடு


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள்  சிறப்பாக  தேர்வு எழுதுவதற்கு வசதியாக, அனைத்து பாடங்களுக்கான வழிகாட்டுதல்  கையேடு பள்ளிக் கல்வித்து றை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஏற்கனவே  கல்வி சார் மேலாண்மை தகவல் முறைமை திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதன்  மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் போன்றவர்களின் முழுமையான தகவல்கள், துறைகளுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்துதல், பள்ளி நிர்வாகம்  மற்றும் கல்விசார்  பாடப் பொருள் பகிர்ந்தளிக்கும் தளம் போன்றவை இணைய தளம்  மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  வகுப்பு மாணவர் கள் பயன்பெறும் வகையில் கையேடு ஒன்றை பள்ளிக் கல்வித்துறை  வெளியிட்டுள்ளது. பொதுத்  தேர்வை பயமின்றி எதிர்கொண்டு சிறப்பாக எழுதி அதிக  மதிப்பெண் பெறும் வகையில் அந்த கையேடு  வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த  கையேட்டை வைத்து ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழிகாட்ட  ஏற்ற வகையில்  தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் அனைத்து பாடங்களும் வழிகாட்டுதல்கள் உள்  ளன. இதை பள்ளிக் கல்வித்துறையே தயாரித்துள்ளது. இந்த கையேடு   www.ecs.tnschools.gov.in  என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment