Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 18 February 2014

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாரடைப்பை தடுப்பதற்கு மூலிகை மருந்து கண்டுபிடிப்பு: துணைவேந்தர் தகவல்


தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலை நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள மூலிகை அறிவியல் துறையில் மாரடைப்பு நோய் தடுப்புக்கு  புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. எலிகள் மூலம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது. முதலில்  மாரடைப்பு நோயை உருவாக்கக்கூடிய மருந்துகள் 9 எலிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மாரடைப்பை  குணப்படுத்துவதற்கான மூலிகை மருந்து 6 எலிகளுக்கு கொடுக்கப்பட்டது. மற்ற 3 எலிகளுக்கு  வழங்கவில்லை. இந்த 3 எலிகளும் ஒன்றரை நாளில் இறந்துவிட்டன. 

மருந்து புகட்டப்பட்ட 6 எலிகள்  எப்போதும்போல் சுறுசுறுப்பாக உள்ளது. இறந்த எலிகள் உயிருடன் உள்ள எலிகளின் மூலக்கூறு களை  எடுத்து டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் விரைவில்  வந்து விடும். பின்னர் காப்புரிமை பெற்று பொதுமக்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முத்திரையுடன் ம ருந்து வினியோகம் செய்யப் படும். இதேபோல் சிறுநீரக நோய் தடுப்புக்கான மருந்தும் கண்டுபிடிக்கப்ப ட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment