Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 February 2014

தனியார் மற்றும் சிறுபான்மை தமிழ்வழி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க கோரி தமிழ்வழி பள்ளி கூட்டமைப்பு மாநாடு


திருச்சி உழவர் சந்தையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக கத்தோலிக்க  கல்விக் கழகம், தமிழ்நாடு தமிழ்வழிப்பள்ளி நிர்வாகிகளின் கூட்டமைப்பு, தமிழக சிறுபான்மைப்பள்ளி ஆசிரியர் கள் சங்கம் சார்பில் மாநாடு நடக்கிறது. 
இதுகுறித்து திருச்சி மறைமாவட்ட முதன்மை குருகுல முதல்வர் தாமஸ்பால்சாமி அடிகள், தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரிய சங்க மாநில செய லாளர் பெஸ்கி, தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழக மாநில செயலாளர் அருளப்பன், தமிழ்நாடு தமிழ் வழிப்பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் முஸ்தபா கமால், கவுரவத் தலைவர் பாண் டியன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியது: 
தனியார் மற்றும் சிறுபான்மை தமிழ்வழி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க கேட்பதே இம்மாநாட்டின் ஒரே கோரிக் கை ஆகும். 1998ம் ஆண்டு தமிழக அரசு, கல்வித்துறையில் 14ஏ என்ற  சட்ட திருத்தத்தை  கொண்டு வந்தது. 1991-92 கல்வி ஆண்டிலும், அதன் பிறகும் தொடங்கப்பட்ட உயர் நிலை, மேல்நிலை என்று தரம் உயர்த்தப்பட்ட தனி யார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கப்பட மாட் டாது என்பதே அந்த சட்டம் ஆகும். அந்த சட்டத்தின் விளைவாக இப்பள்ளிகளில் பணிபுரியும்  8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம் வழங்கக்கூடிய மிகமிக குறைந்த  சம்பளத்தில் பணிபுரிகிறார்கள். இந்த ஆசிரியர்களின் குடும்பங்கள் வறுமையிலே வாடுகின்றன. இப்பள்ளியில் பயிலும் 6 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா கணிணி, சைக்கிள்கள், கல்வி உதவித்தொகை ஆகியவை கிடைப்பதில்லை. 
அதனால், தமிழக அரசின் இந்த 14ஏ சட்டம் தமிழ்வழி கல்விக்கு எதிரானதாகவும், தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும்  ஆசிரியர்களுக்கு எதிரானதாகவும், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எதிரானதாகவும்,  மத, மொழி சிறுபான்மையினருக்கு எதிரானதாகவும் உள்ளது. எனவே இந்த சட்டத்தை திருத்த தமிழக அரசையும், முதல்வரையும் கேட்டுக்கொள்கிறோம்.
வரும் கல்வி ஆண்டிலிருந்து இந்த ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம்  வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  1991ம் ஆண்டுக்கு முன்பாக தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியப் பணியிடங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment