Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 23 February 2014

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி 'லீவ்' போராட்டம்: ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் பாடம் நடத்த கல்வித் துறை அதிகாரிகள் திட்டம்


தமிழகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை, 'பிசு பிசுக்க' வைக்க, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், இம்மாதம் 26ல், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 25ல் உள்ளிருப்புப் போராட்டமும் நடக்கிறது. ஒரே நாளில், 60 ஆயிரம் ஆசிரியர்கள் வரை விடுப்பு எடுப்பதால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் (பி.ஆர்.டி.,), 25 மற்றும் 26ல், தொடக்கப் பள்ளிகளில் பாடம் நடத்த கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment