வால்பாறை அருகே, பள்ளிக்கு, பகல் நேரத்தில், 'விசிட்' செய்த, யானைகளைக் கண்டு, மாணவர்களும், ஆசிரியர்களும் பீதியில் உறைந்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது, சின்கோனா (டேன்டீ). கடந்த சில மாதங்களாக, இப்பகுதியில் வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்தி வரும் ஐந்து காட்டு யானைகள், நேற்று மாலை, 3:40 மணிக்கு, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு வந்தன. வகுப்புகள் நடந்து கொண்டிருந்ததால், மாணவர்கள் எவரும் மைதானத்தில் இல்லை. யானைகளைக் கண்ட ஆசிரியர்களும், மாணவர்களும் கூச்சலிட்டனர். வார்டு கவுன்சிலர் மற்றும் ஆசிரியர்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் இல்லாததால், யானை, சிறுத்தை மற்றும் பாம்புகள், பள்ளிக்குள் படையெடுக்கத் துவங்கி விட்டன. மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பது, பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment