Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 17 February 2014

மொபைல் போன் கட்டணங்களை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு


 தனியார் நிறுவனங்களின் மொபைல் போன் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படவுள்ளன.
நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு, மொபைல் போன் சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்து உள்ளன.
""எங்கள் நிதி நிலையை சமாளிக்க, மொபைல் போன் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும். 
அதற்கான சரியான தருணம் வந்துள்ளது. விரைவில் கட்டண உயர்வு அறிவிக்கப்படும்,'' என, "வோடபோன்' 
நிறுவன தலைமை செயல் அதிகாரி, மார்டின் பீட்டர்ஸ் தெரிவித்து உள்ளார்.
வோடபோனை அடுத்து, ஏர்டெல், ஐடியா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் விரைவில் கட்டணங்களை உயர்த்தவுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தற்போதுள்ள கட்டணம் உயர்வதோடு, இலவச அழைப்புகள், சலுகைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment