Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 11 February 2014

அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், சம்பளக் குறைப்பு, துறை ரீதியான நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை


ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், சம்பளக் குறைப்பு, துறை ரீதியான நடவடிக்கை போன்ற, கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும், நாளையும், வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு அலுவலகங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய பணியாளர் நலம் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய அரசின், அனைத்து துறை செயலர்களுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ள அறிக்கை:
ஊழியர் சங்கங்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அதிகாரம் இல்லை. இதை மீறி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தால், அது, தவறான நடத்தையாகக் கருதப்படும் என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே ஒரு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவை, அரசு ஊழியர் சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் மீறி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளக் குறைப்பு, துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகிய விளைவுகளை, ஊழியர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
போராட்டம் நடக்கும் காலத்தில், எந்த ஒரு ஊழியருக்கும் விடுப்பு அனுமதிக்கக் கூடாது; வேலைக்கு வரும் ஊழியர்களை தடுக்கவும் கூடாது. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், எத்தனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போகின்றனர் என்பதை, தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment