Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 7 February 2014

உண்மை தன்மை அறியும் சான்று கிடைப்பதில் கால தாமதம் : அரசு பணியாளர்கள் தவிப்பு


அரசு பணியில் சேர்பவர்களின், கல்விச் சான்றிதழ்கள், உண்மை தன்மை அறிதலுக்காக, சம்பந்தப்பட்ட பல்கலைகளுக்கு, அனுப்பப்படும் போது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுவதாக கூறப் படுகிறது. தமிழக அரசு பணியில் சேருவோர், இரண்டு ஆண்டுகளுக்குள், அதாவது தங்கள், தகுதிகாண் பருவத்திற்குள், தங்களின் கல்விச் சான்றுகள் உண்மையானவை என்பதை நிரூபிக்க வேண்டும்.
இதற்காக, அவர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ் களை, பள்ளி என்றால், அரசு தேர்வுகள் துறைக்கும், கல்லூரி எனில், சம்பந்தப்பட்ட, பல்கலைக் கழகத்திற்கும், உரிய கட்டணத்துடன், உண்மை தன்மை அறிதலுக்காக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளும், கல்வி அமைப்பு, அதனுடன் இணைக்கப்படும், அசல் சான்றிதழ் கொண்டு, ஆவணங்களை சரிபார்த்து சான்றளிக்க வேண்டும்.
இவ்வாறு உண்மை தன்மை அறிதலுக்காக அனுப்பப்படும் சான்றுகள், சில நேரங்களில், விரைவாக வந்துவிடுகின்றன; பல நேரங்களில், மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. குறிப்பாக, பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்படும் சான்றிதழ்கள், காலதாமதமாகவே வந்து சேர்க்கின்றன. இதனால், அரசு பணியில் சேர்ந்தோர், சம்பள உயர்வு பெறும் போதும் சிக்கல்கள் ஏற்பட்டுகின்றன. அதே நேரம், பல்கலைக் கழங்களில், சம்பந்தப்பட்ட பிரிவுகளில், ஆட்கள் பற்றாக்குறை தான், இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த, 10 ஆண்டுகளுக்குள் உள்ள சான்றிதழ்கள் விரைவாக, உண்மை தன்மை அறியப்பட்டு, அனுப்பப்படுவதாகவும், அதற்கு முந்தைய சான்றிதழ்களுக்கான, ஆவணங்கள் தேடிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment