Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 21 February 2014

இரட்டைப்பட்டம் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் அடுத்த வாரம் SLP தாக்கல்


இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி ஆனதால் வழக்கை உச்ச நீதி மன்றம் கொண்டு செல்ல வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 18.2.2014 அன்று சென்னையில் வழக்குரைஞரை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின் நம்மை தொடர்பு கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், அடுத்த வாரம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வழக்குரைஞருடன் புதுதில்லி செல்லவிருப்பதாகவும் அப்பொழுது சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் நம்மிடம் தெரிவித்தனர்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இணைப்பு:

இந்த வழக்கில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 10 பேர் இணைந்துள்ளனர். இவர்கள் தாங்கள் பணி நியமனம்  பெறும்பொழுது இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்வழக்கு இவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனை என்பதால் மிகவும் ஆர்வமுடன் இதில் பங்கெடுத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Thanks To Mr.Muthupandian

No comments:

Post a Comment