Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 31 March 2014

ஏப்., 23, காலை 11.00 மணிக்குள் இருக்கணும்; ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு உத்தரவு


திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2,120 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் மூன்று ஓட்டுப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 176 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். ஓட்டுப்பதிவு அலுவலர்கள், வரும் ஏப்., 23ம் தேதி காலை 11.00 மணிக்கு, ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டும். ஓட்டுச்சாவடியை சுற்றி, 200 மீட்டர் தூரத்தில், கட்சி சின்னங்களோ, கொடிக்கம்பங்களோ, விளம்பரங்களோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஓட்டுச்சாவடிக்கு வரும் பகுதிகள், வேட்பாளர் பெயர்களை, சுவற்றில் ஒட்டி வைக்க வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முன்னதாக, கட்சிகளின் பூத் ஏஜன்ட் நியமனம், இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளையும் செய்து முடிக்க வேண்டும். ஏப்., 24ம் தேதி காலை 6.00 மணிக்கு, பூத் ஏஜன்டுகள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்திப் பார்க்க வேண்டும். அதன்பின், காலை 7.00 முதல் மாலை 6.00 மணி வரை ஓட்டுப்பவு நடத்த வேண்டும். தேர்தல் கமிஷன் வழங்கும் படிவத்தில், பார்வையாளர்களிடம் குறிப்பு எழுதி பெற வேண்டும். இதேபோல், ஓட்டுப்பதிவு அலுவலர் 1, 2 மற்றும் 3 ஆகியோருக்கும் பல்வேறு பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தொகுதியிலும், தேர்தல் பிரிவு அதிகாரிகளும், மண்டல அதிகாரிகளும் நேற்று ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு, நஞ்சப்பா பள்ளியிலும், தெற்கு தொகுதிக்கு, ஜெய்வாபாய் பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, அவர்களுடைய தொகுதி மற்றும் வாக்காளர் பட்டியல் விவரங்களை பெற, படிவம் 12 மற்றும் 12ஏ ஆகிய படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டனர். அடுத்ததாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு, "கன்ட்ரோல்' யூனிட்டை இயக்குவது குறித்து "பவர் பாயின்ட்' மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க, அவர்களை பற்றிய விவரம் பெற்று, போட்டோ எடுக்கப்பட்டது. அடுத்த பயிற்சியின் போது, கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும். இறுதி கூட்டத்தில், தபால் ஓட்டு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment