தேர்தலில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் வழங்கப்படுவது போல, நோட்டாவுக்கு தலைகீழ் கட்டைவிரல் சின்னம் வழங்க பரிசீலனை செய்வதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேற்கூறிய நபர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைக் குறிப்பதற்கு கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்ற சின்னத்தை வடிவமைக்க பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் எஸ்.சத்யச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்த விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்று அதன் சின்னத்தை வடிவமைப்பதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment