Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 8 July 2014

ஜூலை 10 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை மானியம் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளன.


தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
*முதல் நாளான ஜூலை 10 ஆம் தேதி, 
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. 

*11 ஆம் தேதி சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேலைவாய்ப்புத் துறை தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.
*14 ஆம் தேதி காவல் துறை, தீயணைப்பு மீட்புப்பணிகள் தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். 
*15ஆம் தேதி சமூக நலம், சத்துணவுத்திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
*16ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகங்கள், மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு தொடர்பான விவாதமும், *17 ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வி தமிழ் வளர்ச்சித் துறை மானியம் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளன. அதேபோல், 
*18ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை விவாதமும்
* 21ஆம் தேதி எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை மீதான விவாதங்களும் நடைபெறுகின்றன. 

கடைசி நாளான ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி 2014-15ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீனங்களுக்கான முதல் துணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதே நாள்,மானிய கோரிக்கைக்கு நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் செய்யப்படுகிறது. துணை மானிய கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment