"தமிழகத்தில் தொடக்கப்பள்ளியில் பணிபுரிய தகுதி தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், அரசு தேர்வு நடத்துவது, வேதனையாக உள்ளது,'' என்று மாநில பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் க.பரமத்தியில் நடந்த ஆலேசனை கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் செல்வக்கண்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் பேசியதாவது:
மாநிலத்தில் 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, பள்ளிகள் 1,268 உள்ளது. அதில், க.பரமத்தி யூனியனில் மட்டும், 23 பள்ளிகள் உள்ளன. இவைகளை அரசு மூட நடவடிக்கை எடுத்து வருவதால், அதில், பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேவிக்குறியாகி உள்ளது. கரூர் மாவட்டத்தில், ஒரு புறம் காவிரியும், மறுபுறம் அமராவதியும் ஓடியும் பிரயோஜனம் இல்லை. வறட்சி காலங்களில் தொழிலை தேடி பெற்றோர்கள் வேறு இடத்திற்கு செல்வதால், மாணவர்களும் உடன் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, மாவட்டந்தோறும் தொழில் தொடங்க வேண்டும். ஆசிரியருக்கான தேர்வை ரத்து செய்யது, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளை மூடும் நடவடிக்கையை, அரசு உடனே கைவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற, மாவட்ட மூத்தோர் மன்ற சீதாபதி, மாவட்ட செயலாளர் வேலுமணி, மாவட்ட பொருளாளர் சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment