Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 10 July 2014

சுயநிதி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி: தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


சுயநிதி பிரிவில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கினால், அதற்கான தொகை தலைமை ஆசிரியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு அவை வழங்கப்படாது என அரசு உத்தரவு உள்ளது. ஆனால் 2011-12, 2012- 13ல் சில மாவட்டங்களில் சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இது ஆண்டு தணிக்கையின் போது கண்டறியப்பட்டது. "இப்பிரச்னை குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாது என்பது அரசின் கொள்கை முடிவு. அதையும் மீறி வழங்கியிருந்தால், அத்தொகை தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment