அரசு பள்ளி வேலை நாட்களில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு "ஆன் டியூட்டி" இன்றி தற்செயல் விடுப்பு நாளாக கணக்கிடப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் (சர்ப்ளஸ்) கலந்தாய்வு ஜூன் 16 முதல் ஜூலை 2ந்தேதி வரை நடந்தது. வேலை நாட்களில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு நாளாக கருதி தலைமை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அரசே வேலை நாள் என தெரிந்தே கலந்தாய்வு தேதியை நிர்ணயித்தது. கலந்தாய்வில் பங்கேற்ற நாளை பிற பணியாக (ஆன் டியூட்டி) கணக்கிட வேண்டும். ஆனால் தற்செயல் விடுப்பு நாளாக அறிவித்துள்ளனர்.
சொந்த அலுவலுக்காக எடுக்கும் விடுப்பு மட்டுமே தற்செயல் விடுப்பாகும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இது குறித்து வலியுறுத்தியபோது, தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்படும் என நம்பிக்கை அளித்தனர்.
மாவட்ட கல்வித்துறை அலுவலர்களிடம் இருந்து உத்தரவு எதுமில்லை என தலைமை ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இந்த நியாயமற்ற செயலால் 2 அல்லது 3 நாள் வரை பல ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்" என்றார்.
No comments:
Post a Comment