Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 11 July 2014

ஓய்வூதிய மருத்துவ திட்டம்பொருந்தாதவர்கள் யார்?

ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை 1 முதல் அமலாகியுள்ளது. இதன்படி, அடையாள அட்டை வழங்குவதற்காக, கருவூலங்களில் படிவம் பூர்த்தி செய்து வழங்குகின்றனர்.இந்நிலையில், இந்த மருத்துவ திட்டம் யாருக்கு பொருந்தாது என்ற சந்தேகம் எழவே, அதுகுறித்து, அனைத்து அலுவலகங்களுக்கும் அரசு தெளிவுரை யை வழங்கியுள்ளது.இதன்படி உள்ளாட்சி அமைப்புகளின் ஓய்வூதியதாரர்கள், மாநில அரசுகளின் போக்குவரத்துக் கழகங்கள், வீட்டுவசதி, குடிசை மாற்று வாரியங்கள், பல்கலைகள், சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment