மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ்2 தேர்வில் அதிக தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மரக்காணம் அரசு உயர்நிலைப் பள்ளி, கடந்த 1978ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியில் ஆயிரத்து 640 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 29 ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளியில் 14 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளது.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தனியார் தொண்டு நிறுவனம் 14 ஆசிரியர்களை நியமனம் செய்து, மாணவர்களுக்கு பயிற்றுவித்தது.
இதன் காரணமாக கடந்தாண்டு தேர்வுக்கு சென்ற மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற்றனர். இந்த ஆண்டு தொண்டு நிறுவனம் நியமனம் செய்த 14 ஆசிரியர்களை, திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தேர்வு எழுத செல்லும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவது, ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மாவட்ட கல்வித்துறை உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment