Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 10 July 2014

பிழைப்புக்கு அரசு பள்ளி; படிப்புக்கு மெட்ரிக் பள்ளி?


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்பதற்கான புள்ளி விவரம்:

மாநிலம் முழுவதும் 34,180 துவக்க பள்ளிகள், 9,938 நடுநிலை பள்ளிகள், 4,574 உயர்நிலை பள்ளிகள், 5,030 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 53,722 பள்ளிகள் உள்ளன.

இவற்றில் துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 47,030 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 36,322 ஆசிரியர்களின் குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இவர்களில் 9,757 ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளிலும், 26,565 ஆசிரியர்களின் குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில் பயிலுகின்றனர்.

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 50,782 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களில் 32,595 பேரின் குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இதில் 4,281 ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளிலும், 28,314 ஆசிரியர்களின் குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளிலும் பயிலுகின்றனர்.
அரசு ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கும் போது மற்றவர்கள் எப்படி அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்பதை அரசு பள்ளி ஆசிரியர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment