அரசு பணியிலிருக்கும் தம்பதியரில், கணவனோ, மனைவியோ ஓய்வுபெற்றால், இருவரிடம் இருந்தும் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த விதிமுறை மாற்றப்பட வேண்டும்' என, ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1ம் தேதி முதல்:
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், இம்மாதம், 1ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தில், ஓய்வூதியம் பெறுவோரிடம், மாதம், 150 ரூபாய், காப்பீடு திட்டத்திற்கு, பிடிக்கப்படுகிறது. கணவன், மனைவி இருவரும் பயன் பெறலாம்.
ரூ.150 பிடித்தம்:
கணவன், மனைவி இருவரும், ஓய்வூதியர்களாக இருந்தால், ஒருவரிடம் இருந்து மட்டும், 150 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். யாரிடமிருந்து என்பதை, அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதேபோல், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், மாதம், 150 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. கணவன், மனைவி இருவரும் பணியில் இருந்தால், ஒருவரிடம் மட்டும் பணம் பிடித்தம் செய்யப்படும்.
மாற்றம் தேவை:
இருவரில் ஒருவர் ஓய்வு பெற்றால், இருவரிடமும் பணம் வசூலிக்கப்படுவதால், விதிகளில் மாற்றம் தேவை என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, ஓய்வுபெற்ற கூட்டுறவு சார் - பதிவாளர் ஜஸ்டின்ராஜ் கூறியதாவது: அரசு பணியில் இருப்பவர்கள், நான்கு லட்சம் ரூபாய், ஓய்வூதியர்கள் இரண்டு லட்சம் ரூபாய், மருத்துவ காப்பீட்டு தொகை பெறலாம். அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்றால், ஓய்வு பெற்றவர், பணியில் இருப்பவர் என, இருவரிடமும் பணம் வசூலிக்கின்றனர். இது தவறானது. இது தொடர்பான விதிமுறைகளில், உரிய மாற்றம் செய்யும்படி, நிதித்துறை செயலர் அலுவலகத்தில், மனு கொடுத்து உள்ளேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment