• முதலில் செயல்முறை விளக்கத்துடன் பாடங்கள் கற்பிக்கப்படவேண்டும்…..
• மாணவர்களின் திறன்களை வளர்க்க அரசு ஒவ்வொருக்குழந்தையின் திறமையை ஆராய்ந்து அவர்களை ஊக்குவிக்கும் முறையில் பண உதவி அதிக அளவில் செய்யவேண்டும்….
• பாடங்களுடன் மட்டும் இல்லாமல் பிற நாட்டு மொழிகளும் அவர்களின் கலாச்சாரங்களும் கற்பிக்கபட வேண்டும்….
• ஒவ்வொரு வகுப்பறைகளும் வெறும் புத்தகங்களும் மேஜைகளும் நிரம்பிய இடமாக இல்லாமல் மாணவர்களின் கற்பனைத்திறனை தூண்டும் விதமாக புத்தக தகவல்களை வண்ண ஒவியங்களாக சுவற்றிலும் செயல்முறைகளில் அவர்களே செய்து புரிந்துக்கொள்ளும் வண்ணம் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனியாக இருக்கவேண்டும்…
• நம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் நம் கலாச்சாரங்கள் பற்றியும் கதைகளாகவும் முடிந்தால் அவைகளை படங்களாக போட்டுக் காண்பித்தால் நன்கு பதியும்…
• கரும்பலகை கல்வியாக மட்டும் இல்லாமல் சற்று தொழில் நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி வடிவிலான முறைகளைப் பின் பற்ற வேண்டும்….
• மாணவர்களுக்கு மனம் ரீதியான பிரச்சனை இருக்கிறதா என்று அவ்வபோது ஆய்வு கொள்ளவேண்டும்…
• புத்தகங்களில் படிக்கும் தகவலை நேரடியாக பல இடங்களுக்கு கூட்டிச்சென்று காண்பிக்கவேண்டும்….அதில் இருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை அவர்களிடம் கேட்டு ஆய்வு செய்யவேண்டும்…
• படிப்போடு இல்லாமல் விளையாட்டுகளிலும் மாணவர்களை நன்கு ஊக்குவிக்க வேண்டும்…
• அரசு ஆசிரியர்களுக்கு தனியார் ஆசிரியர்களுக்கு நிகராக அவ்வபோது பயிற்சி அளிக்கப்பட வேண்டும் காலத்தின் மாற்றத்திற்க்கு ஏற்ப…..
இவைகளை எல்லாம் நிச்சயம் நடைமுறைப்படுத்தினால் அரசுப்பள்ளியில் தரம் உயர்வது மட்டும் இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்…..அதன் பிறகு தனியார் பள்ளியின் முக்கியத்துவம் குறையும்…….பெற்றோர்களும் தங்கள் பணத்தை விரயம் செய்யமாட்டார்கள் ……..
No comments:
Post a Comment