சென்னை:கற்பித்தலில் சிறந்து விளங்கியதற்காக, மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.முதல் இந்தியர்இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில், 46 பள்ளிகளில் உள்ள 54 ஆசிரியர்களுக்கு, ஈஸிவித்யா நிறுவனம் மூலம், கற்றல், கற்பித்தலில் புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
கற்பித்தலில் சிறந்து விளங்கியதற்காக, அமெரிக்காவின் 'பியர்ஸ்ன் பவுண்டேஷன்' நிறுவனம், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை நடுநிலை பள்ளி ஆசிரியை, ஜரீனாபானுவிற்கு, 'குளோபல் பிரிட்ச் ஐ.டி.,' என்ற விருதினை வழங்கி உள்ளது.
இந்த விருதை பெற்ற முதல் இந்தியர், ஜரீனாபானுதான்.விருது பெற்ற அவரை, மேயர், சைதை துரைசாமி, கல்வித்துறை துணை கமிஷனர் லலிதா ஆகியோர் பாராட்டினர்.விருது ஏன்?கற்பித்தல் சாதனங்களை திறம்பட மற்றும் புதுமையான முறையில் பயன்படுத்தியதற்காக, மாணவர்களின் கற்றல் அம்சங்களை மறுவரையறை செய்ததற்காகவும், வகுப்பறைக்குள் கற்றல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்த நோக்கியா அலைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது போன்ற காரணங்களுக்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment