இடைநிலை கல்வித் திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் முற்றிலும் கண் பார்வையற்ற மாணவர்களுக்கு, தேசிய பார்வையற்றோர் மண்டல மையம் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த மையத்திற்கு, பார்வையில்லா மாணவர்கள் பற்றிய விபரத்தை ஆக., 18ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் பள்ளி சுகாதார துறையின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் குறைபாடு உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு கண்ணாடி வழங்கப்படும். பள்ளிகல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவில்," கண் பார்வையற்ற மாணவர்களுக்கு, சென்னை பூந்தமல்லி, தேசிய பார்வையற்றோர் மையம் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, பார்வையில்லாத மாணவர்கள் பற்றிய விபரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து, ஆக., 18ம் தேதிக்குள் தேசிய பார்வையற்றோர் மண்டல மையத்திற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான உபகரணங்கள், விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment