Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 18 August 2014

பணியிடங்கள் காலி: சிக்கலில் தேர்வுத்துறை


தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையில் உள்ள தேர்வுத்துறையில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி தேர்வு, தேசிய திறனாய்வு தேர்வு, 25 வகையான தொழில் நுட்ப தேர்வுகள் உட்பட ஆண்டு தோறும் 42 வகையான தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் ஆண்டுதோறும் 35 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த தேர்வுத்துறையில் அதிகாரிகள் நிலையில் 30 பணியிடங்களும், 800 பணியாளர்களின் பணியிடங்களும் உள்ளன. இதில் ஏழு மண்டல செயலாளர்கள்,மூன்று துணை இயக்குனர்கள், இரண்டு கூடுதல் செயலாளர்கள் உட்பட 20 அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் உட்பட 200 பணியாளர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இவ்வளவு அதிகாரிகள், பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தேர்வு முடிவு களை வெளியிடுவதில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.எனவே, தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment