ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டது. பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அரசு தெரிவித்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண், அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களே கட்ஆப்பில் தகுதி பெறுவதாக வருகிறது. அதனால் புதிய முறையிலான வெயிட்டேஜ் வேண்டாம் என பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்க்கின்றனர்.
இந்த வெயிட்டேஜ் முறை மதிப்பெண்ணால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மா வட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட 90க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மாநகராட்சி சமூக கூடத்தில் அடைத்தனர்.
தற்காலிக ஆசிரியர் தேர்வு பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment