Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 15 August 2014

பொதுத் தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்க கையேடு திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தகவல்


பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறாதது வேதனை அளிக்கிறது'' என, திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில், 2012-13ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், 95.74 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், கடந்த 2013-14 ம் ஆண்டில் 92.45 சதவீத மாணவ, மாணவியர் களே தேர்ச்சி பெற்றனர். 3.29 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்தது.
இதனால், நடப்பாண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிக்காட்டி கையேடு வழங்க, திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் அதிகள வில் தேர்ச்சி பெறுவது இல்லை. தமிழ் பாடங்களில் மாணவ, மாணவியர் தோல்வி அடைவது வேதனையாக உள்ளது. இது குறித்து கல்வியாளர்களிடம் கேட்ட போது, பேசும் தமிழ் ஒரு மாதிரியாகவும், பாடங்களில் உள்ள தமிழ் வேறு மாதிரியாகவும் உள்ளதாக தெரிவித்தனர். வரும் கல்வியாண்டில் (2014-15) எஸ்.எஸ். எல்.ஸி., தேர்வில் தேர்ச்சி விகித்தை அதிகரிக்க, சிறப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு, ஐந்து பாடப்பிரிவுகளிலும் சிறப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்படும். இந்த கையேட்டில், கேள்வி, பதில் இடம் பெற்றிருக்கும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு வழிகாட்டி கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் நிலை உருவாகும் என நம்புகிறோம், என்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி உள்ளிட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment