டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா உளுந்தாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக சிவானந்தராஜாவும், இளநிலை பட்டதாரி ஆசிரியராக விமலாவும் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுடைய வருகை பதிவேட்டில் விமலாவின் பெயர் முதலாகவும், சிவானந்தராஜாவின் பெயர் இரண்டாவதாகவும் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், டி.இ.ஓ., மதிவாணன், கடந்த மாதம் 4ம் தேதி பள்ளி வந்து விசாரித்து, சீனியாரிட்டி அடிப்படையில் வருகை பதிவேடு எழுதும்படி தலைமை ஆசிரியர் அருள்மொழியிடம் கூறிவிட்டு சென்றார்.
ஆனால் டி.இ.ஓ., உத்தரவை மதித்து, சீனியாரிட்டி முறையை கடைபிடிக்காததால், தலைமை ஆசிரியர் அருள்மொழியை சஸ்பெண்ட் செய்து டி.இ.ஓ., மதிவாணன் உத்தரவிட்டார்.தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர்கள், நேற்று பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடையே பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறி, பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஏ.இ.ஓ., செலின்மேரி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.
No comments:
Post a Comment