Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 31 October 2013

கானல் நீராகும் 100 சதவீத தேர்ச்சி - கடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு, எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள்


பள்ளிகளில் கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் 100 சதவீத தேர்ச்சி கேள்விக்குறியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 அரசு தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை அடைய கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் பள்ளிகளில் பாடங்களுக்கு தேவையான ஆசிரியர்களை இப்பணியிடங்களுக்கு நியமிக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல் ஏற்கனவே அதிக ஆசிரியர்கள் இருக்கும் பாடங்களுக்கே தற்காலிக ஆசிரியர்கள் சில பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக, கணிதம், ஆங்கிலம் போன்ற கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் தமிழ், பொருளாதாரம், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொடர்ந்து பள்ளிகளில் கடின பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் 100 சதவீத தேர்ச்சி என்பது கேள்விக்குறியாகும். 
மேலும், ஏற்கனவே பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் கூடுதல் பணியாக தற்காலிக ஆசிரியராக சில பள்ளிகளில் நியமனம் பெற்றுள்ளனர். இதனால் ஒரே ஆசிரியர் இரு சம்பளத்தை தலைமை ஆசிரியர்கள் உதவியுடன் பெறும் ‹ழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பள்ளி வாரியாக இதனை ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை செய்து பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்கவும், கடினமான பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்கவும், இதில் தொடர்ந்து குளறுபடிகளை செய்து வரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி கிடைக்கும்.

1000 பள்ளிகள் மீது நடவடிக்கை


தமிழகத்தில் செயல் படும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த கட்டண கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 2010 முதல் அந்த கமிட்டி தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது. 2013 முதல் 2016 வரைக்கான கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கட்டண கமிட்டி பள்ளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரியில் செயல் படும் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் நேற்று கட்டண கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வாயிலில் அமர்ந்து கோஷமிட்டனர்.  இதனால் நேற்று காலை டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கட்டண கமிட்டி தலைவர் நீதிபதி சிங்காரவேலு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும் போது ஆசிரியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை கட்டண கமிட்டி குறைக்கிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளிக்கான கட்டணத்தை,  ஆசிரியர்களின் சம்பளம் பாதிக்காத வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது; தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்க விசாரணை நடக்கிறது. இதுவரை 10,780 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் 35 பள்ளிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் செயல் படும் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 100 ஆசிரியைகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதை கமிட்டி பரிசீலனை செய்யும். மேலும், பள்ளி நிர்வாகம் கமிட்டியிடம் கொடுக்கும் வரவு செலவு பட்டியலின் அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயிக்கிறோம். எந்த பள்ளியின் மீதும் விருப்பு வெறுப்பு கிடை யாது. எனவே ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில் லை. தற்போது நடக்கும் விசாரணையில் 1000 பள்ளிகள் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இதுவரை 3 சம்மன்கள் அனுப்பி விட்டோம். அந்த பள்ளிகள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் கேட்டிருக்கிறோம். அந்த பள்ளிகள் இயங்குகிறதா, அங்கீகாரம் வாங்கியுள்ளார்களா, அங்கீகாரம் புதுப்பிக்கவில்லையா என்றும் கேட்டுள்ளோம். அதற்கான விளக்கம் கிடைத்ததும் அந்த பள்ளிகளிடம் விசாரணை நடத்தப்படும். 
இவ்வாறு நீதிபதி சிங்காரவேலு தெரிவித்தார். 

மனநல ஆலோசகர்களை நியமிக்க கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

 "மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப" மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை வக்கீல் ஞானகுருநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக கல்லூரிக் கல்வி இயக்குனர் 2011 மே 25 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், "கல்லூரி மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதால், தவறுகள் செய்ய நேர்கிறது. இதனால் தண்டனைக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதை தடுக்க ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும். அதிக விடுப்பு எடுக்கும் மாணவர்களை கண்காணித்து, அறிவுரை வழங்க வேண்டும்.குறைந்தபட்ச வருகைப்பதிவு இல்லாவிடில், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு மாணவர்களுடன் இணக்கமாக பேசி தீர்வு காண மூத்த பேராசிரியரை உளவியல் ஆலோசகராக நியமிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.நடப்புக் கல்வியாண்டில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடியில் ஒரு தனியார் கல்லூரி முதல்வரை கொலை செய்துள்ளனர். 535 பொறியியல் கல்லூரிகளில் 120 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, திறனை மேம்படுத்த நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.ஒரு பி.டெக்., மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தடுக்க தேர்வுக்கு முன்னும், பின்னும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த மனநல ஆலோசகர்களை நியமிக்க ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் 2008-09ல் துவக்கப்படும், என அரசு அறிவித்தது. இதுவரை நடவடிக்கை இல்லை.அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்கக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார். நீதிபதிகள் வி.தனபாலன், ஜி.சொக்கலிங்கம் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் வக்கீல் சாமிதுரை ஆஜரானார். உயர்கல்வி செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பள்ளியில் பல் இளிக்குது சுகாதாரம் ஜொலிக்குது "அம்மா உணவகம்' - தினமலர் செய்தி


இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட  வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும்,

வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும்,  இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்க உத்தரவு

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது

தலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS உறுதிமொழி மற்றும் நிறைவு சான்று

EMIS பணிகளை 30.10.2013 க்குள் முடிக்க உத்தரவு

OFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி? வீடியோ விளக்கம்

OFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி? வீடியோ விளக்கம்

OFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி? வீடியோ விளக்கம்

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்,லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும் வேளையில்தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்,
லஞ்சம் வாங்கிய கிளர்க்கைலஞ்ச ஒழிப்பு போலீசார்நேற்று கைது செய்தனர்.

அக்டோபர்28 முதல்நவம்பர்2ம் தேதி வரைஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்அனைத்து அரசு ஊழியர்களும்ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வர். இந்நிலையில்,தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்பில் செக்ஷனில்எழுத்தராக பணியாற்றி வருபவர் மோகன்ராம்50. இவர்தாரமங்கலம் யூனியன் வணிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின்பி.எஃப்.,மற்றும் ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வுஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்காண பில்களை பாஸ் செய்ய5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்துவணிச்சம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம்சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார்தலைமை ஆசிரியர் செல்வத்திடம்ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

நேற்று முன்தினம் மாலைதாரமங்கலம் ஏ.இ.ஓ.அலுவலகம் சென்ற தலைமை ஆசிரியர் செல்வம்ரசாயன பவுடர் தடவிய பணத்தைஎழுத்தர் மோகன்ராமிடம் வழங்கினார் . அப்போதுஅங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.,சந்திரமௌலிஇன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார்,மோகன்ராமை கையும் களவுமாக பிடித்துகைது செய்தனர். சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,மோகன்ராம் சிறையிலடைக்கப்பட்டார்.

இரட்டைப்பட்டம் இன்று (31.10.2013) வரிசை எண் 36 ல் விசாரணைக்கு வருகிறது

இன்று  (31.10.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண் 36-ல் விசாரணைக்கு வருகிறது.

திருச்சி காஜாமலையைச்சேர்ந்த மாணவி சுல்தானா மரணம் குறித்த வழக்குகள் மாநில குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றம் சட்டசபையில் ஜெயலலிதா தகவல்

திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்த மாணவி சுல்தானா மரணம் குறித்து, பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும், மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று, சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
உறுப்பினர் கோரிக்கை-ஜெயலலிதா விளக்கம்
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-
முதல் துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய உறுப்பினர் ஜவருல்லா, திருச்சியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி தவுபிக் சுல்தானா என்ற மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு இலக்காகி அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ரெயில்வே இருப்புப்பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது என்றும், அந்த வழக்கை தமிழ்நாடு அரசு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என்றும், விரைவிலே குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மாணவி சுல்தானா
திருச்சி, காஜாமலை பகுதியைச்சேர்ந்த அக்பர் பாட்சா என்பவரின் மகள் தவுபிக் சுல்தானா மேலப்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த 13.08.2013 அன்று பள்ளிக்கு சென்ற சுல்தானா, மாலையில் வீடு திரும்பவில்லையென, அவரது உறவினர் ஜமாலுதீன் என்பவர் 14.08.2013 அன்று அளித்த புகாரின் பேரில், பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் காணாமல் போன தவுபிக் சுல்தானா ரெட்டைமலை ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகில் இறந்து கிடப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, காவல் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக திருச்சி ரெயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவ்வழக்கு எடமலைபட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இறப்பில் சந்தேகம்
சுல்தானாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், எதிரிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கோரி, த.மு.மு.க. உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்து 15.08.2013 அன்று 16.08.2013 ஆகிய தேதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.
இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குற்றப்புலனாய்வு துறை விசாரணை
பின்னர், சுல்தானா குறித்து பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் 30.08.2013 அன்று மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் இருந்து திரும்பிய மாணவி வழக்கப்படி வீட்டிற்கு செல்லாமல் ரெயில் பாதையில் நடந்து செல்வதை பல சாட்சிகள் கண்டுள்ளனர். புகைவண்டியில் இப்பெண் அடிப்பட்டதற்கான அறிகுறிகள் பிரேத பரிசோதனையில் காணப்பட்டுள்ளன. இது விபத்து காரணமாக ஏற்பட்டதா அல்லது தற்கொலையா அல்லது வன்முறையினால் நடைபெற்ற மரணமா என்பது புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

இரவு 10 மணிக்கு மேல் சத்தம் கூடாது பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு


 திருச்சி மாவட்டத்தில் குடிசை பகுதிகளில் ராக்கெட் வெடி வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: வெடியினால் ஏற்படும் தீய விளைவுகளை அனை வரும் உணர வேண் டும். 125 டெசிபல் அளவு க்கு மேல் ஓசை ஏற்படுத் தும் வெடிகளை வெடிப்பது தவிர்க்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள், நெரிசல் மிக்க இடங்களில் வெடிகள் வெடிக்க வேண் டாம். மருத்துவமனை, பள்ளிகள், நீதிமன்றங்கள் போன்ற அமை தியான பகுதிகளில் வெடி களை வெடிக்க கூடாது. ஒளி மற் றும் வண்ணம் ஏற்படுத்தும் மத்தாப்புகளை வெடிக்கலாம். குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொரு ட்கள் இருக்கும் இடங்களில் ராக்கெட் வெடிகள் வெடிக்க கூடாது. வெடி வெடிக்கும்போது, தீக்கா யம் ஏற்பட்டால் முத லில் அதிக தண்ணீரை காயத் தின் மேல் ஊற்றவும், கண் ணில் ஏற்படும் காயங்களுக்கு நிறைய தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்கு குறையாமல் கழுவ வேண் டும். பின்னர் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். ஒலி மாசு ஏற்படுத்துகின்ற பட்டாசு களை தவிர்த்து, வண்ண மிகு ஒளி ஏற்படுத்தும் பட்டாசு களை மட்டும் உபயோகித்து வழக்கமான உற்சாகத்து டன் தீபாவ ளியை கொண்டாடி சுற்றுசூழலை பாது காக்க வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.