Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 31 December 2013

உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை: கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்


தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 160 மாணவர்களுக்கு, ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் வீதம், பணியில் நியமிக்கலாம். பின், ஒவ்வொரு, 30 மாணவர்களுக்கும், ஓர் ஆசிரியர் வீதம், கூடுதலாக நியமிக்கலாம். மாநில அளவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2013 ஆக., 1ம் தேதி படி, ஆசிரியர்கள், மாணவர்கள் விகித கணக்கெடுப்பு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை விட, ஆசிரியர்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விகிதாசார அடிப்படையில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய - பணிநிரவல் செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில், இதற்கான, பணிநிரவல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என, பல லட்சம் ரூபாய் கொடுத்து, பணியில் சேர்ந்தோம். உபரி என்ற பெயரில், இடமாற்றம் செய்தால் குடும்ப சூழ்நிலை பாதிக்கும் என்றனர்.

ஒப்புதலில் சிக்கல் : ஒரு உதவி பெறும் பள்ளியில் இருந்து,மற்றொரு பள்ளிக்கு ஆசிரியர் மாற்றப்படும் போது, சம்பந்தப்பட்ட பள்ளி சார்பில், அந்த ஆசிரியரை ஏற்றுக்கொள்கிறோம் என்ற ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பல பள்ளிகள், இதற்கான ஒப்புதலை அளிக்க முன்வரவில்லை. தற்போது இருக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையே போதும் என்ற நிலையை, பள்ளிகள் எடுக்கும்போது, பணிநிரவல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம், என, கல்வித் துறையினர் கூறுகின்றனர்.

புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக கேலி, கிண்டல் செய்தால் காப்பு

குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், புத்தாண்டு கொண்டாடம் என்ற பெயரில், பெண்களை கேலி, கிண்டல் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்து உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக செல்வோர், இரண்டு பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக, பெண்களை கேலி, கிண்டல் செய்தல், கையைப் பிடித்து இழுத்தல் கூடாது; மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. இழிவான முறையில் கேலி, கிண்டல் செய்வோர், வர்ண பொடிகள் தூவுதல், வர்ணம் கலந்த தண்ணீர் அடித்தல் போன்றவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கடலில் விளையாடுதல், படகுகளில் ஏறி கடலுக்குள் செல்வது கூடாது. இருசக்கர வாகனங்களில், ரேஸ்களில் ஈடுபடுவதை கண்காணிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவை, போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


போக்குவரத்து மாற்றம் : இரவு, 8:00 மணிக்கு மேல், கடற்கரை உட்புற சாலைக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. உட்புற சாலையில் உள்ள வாகனங்கள், இரவு, 8:00 மணி வரை ?வளியே அனுமதிக்கப்படும்.காந்தி சிலை முதல், போர் நினைவுச் சின்னம் வரை, இன்று இரவு, 8:00 முதல், நாளை அதிகாலை, 2:00 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். எந்த வாகனமும் கடற்கரை சாலையில் இருந்து, காமராஜர் சாலைக்கு அனுமதிக்கப்படாது. ராஜாஜி சாலை, எலியட்ஸ் கடற்கரை சாலையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.


திருச்சி: ஹோட்டல்களில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநகர போலீஸ் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இன்று இரவு, இளைஞர்கள் குடி போதையில் பைக்குகளில், அதிக எண்ணிக்கையில் அமர்ந்து கொண்டு படுவேகமாக சென்று மக்களுக்கு இடையூறு செய்தல், பெண்களிடம் அத்துமீறி நடப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது.
குடி போதையில் டூவீலர் ஓட்டுபவர்கள், இரண்டு நபர்களுக்கு மேல் செல்பவர்கள், அதிவேகமாக ஓட்டுபவர்கள் ஆகியோரை தடுக்க, போலீஸார் பல குழுக்களாக பிரிந்து மாநகர் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகரில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளிலும், போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து ஹோட்டல்களிலும் நடனங்கள் நடத்துவது, ஹோட்டலுக்கு வெளியில் பார்ட்டி என்ற பெயரில் கும்மாளம் அடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி பெண்களை கேலி, இழிவு படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தி, அநாகரீக முறையில் மது அருந்துதல், வெடி வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அனைத்து ஹிந்து கோவில்கள், முஸ்லிம் மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் யாராவது மக்களுக்கு இடையூறு செய்தால், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, 100 என்ற டெலிஃபோனில் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கூட்டுறவு வங்கிக்கு தேர்வாகியும் பணி இல்லை : அரசு இழுத்தடிப்பால் தவிக்கும் பட்டதாரிகள்


கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடத்தி ஓராண்டாகியும், இன்னும் வேலை தராமல் அரசு இழுத்தடிப்பதால், பட்டதாரிகள், 7,200 பேர் தவித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு தமிழக கூட்டுறவு வங்கிகளில், 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, கூட்டுறவு சங்க மாநில ஆள் சேர்ப்பு நிறுவனம் வாயிலாக, 2012 டிச., 9ல், எழுத்துத் தேர்வு நடந்தது.
இதில், 7,200 பேர் தேர்வாயினர். நேர்முகத்தேர்வு, மாவட்ட வாரியாக, டிச., 28ம் தேதி முதல், டிச., 31ம் தேதி வரை நடந்தது. இதில், தேர்வானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. நேர்முகத்தேர்வு முடிந்து ஓராண்டாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை.
தேர்வானவரகள் பட்டியல் கூட ?வளியிடாமல், அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால், 7,200 பட்டதாரிகளும் பரிதவித்து வருகின்றனர்.

பணிக்காக காத்திருக்கும் மணிகண்டன் கூறுகையில், முதல்வர் தனிப்பிரிவு, கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் என, மாறி மாறி அலைந்தும் ஒன்றும் நடக்கவில்லை. சமீபத்தில், கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டோம். பாதிக்கபட்டோரை ஒருங்கிணைத்து, தொடர் போராட்டம் நடத்த ஆலோசித்து வருகிறோம், என்றார்.

வழக்கில் உள்ளது : இதுகுறித்து கூட்டுறவு சங்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர்களின் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், ஏற்கனவே தற்காலிக பணியாளராக உள்ளோர் கோர்ட்டிற்குச் சென்றதால், உடனடியாக வேலை வழங்க முடியாத நிலை உள்ளது. சிக்கலைத் தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

சென்னை மாநகராட்சி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது?


 சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், உரிய பயிற்சி முடித்தும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

92 ஆசிரியைகள் : தற்போது, மாநகராட்சி வசம், 40 மழலையர் பள்ளிகள் உள்ளன. அவற்றில், 92 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அவர்களை தவிர, வகுப்பறைக்கு ஒரு ஆயா, பள்ளிக்கு ஒரு அலுவலக உதவியாளர் பணியில் உள்ளனர். துவக்கத்தில், அவர்கள் அனைவரும், தற்காலிகமாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், 25 ஆசிரியைகள், ஆயாக்கள், அலுவலக உதவியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆசிரியைகள், 67 பேர் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

பயிற்சி அளித்தும்... : அவர்கள் அனைவரும், அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தில், ஓராண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்ததாக காரணம் கூறப்பட்டது. இதை அடுத்து, அந்த ஆசிரியர்கள் அனைவருக்கும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில், ஆறு மாதம், மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கு பின், அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், சம்பளத்தில் வித்தியாசம், விடுப்பு உட்பட, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தடுக்க முடியாது : இதுகுறித்து மாநக ராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,மழலையர் பள்ளி ஆசிரியைகளில் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஓராண்டு பயிற்சி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோப்பு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி ஆசிரியைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களை பணிக்கு தேர்வு செய்யும் போது, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும் என, குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. அதனால், ஓராண்டு பயிற்சி முடித்த ஆசிரியைகளின் பணி நிரந்தரத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனாலும், அரசின் ஒப்புதல் கிடைக்காததால், பணி நிரந்தரம் தாமதமாகி வருகிறது என்றார்.

முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்


தொடக்கக் கல்வியில், பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என,கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், தொடக்கக் கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 2004-05ம் ஆண்டு முடிய, இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது எனவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு, அந்தந்த, பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது எனவும்,அரசு முடிவெடுத்தது.

அதன்படி, தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில், 2005ல் இருந்து, 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர்நிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு, மாநில முன்னுரிமை அடிப்படையில், 50 சதவீதம், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக்கல்வி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. பள்ளிக்கல்வித்துறையின் கீழ், தொடக்கக்கல்வித்துறை செயல்பட்டாலும், அதை, தனி யூனிட்டாகவே கருதி, தனி நிர்வாகம் நடந்து வருகிறது. இதனால், தொடக்கக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு என்பது கானல் நீராக உள்ளது.முதுகலை ஆசிரியர் நியமனத்தில், தங்களுக்கும், பதவி உயர்வு வாய்ப்பு வழங்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
ஒரே சமயத்தில், டி.ஆர்.பி., தேர்வெழுதி பணிநியமனம் பெற்ற நிலையில், உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சில ஆண்டுகளில், அவர்கள், தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக்கல்வி அலுவலராகவும் மாற வாய்ப்பு உள்ளது. 
ஆனால், தொடக்கக்கல்வித்துறையில் பணியில் சேர்ந்த, பட்டதாரி ஆசிரியர்கள், கடைசி வரை, பட்டதாரி ஆசிரியர்களாவே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதை மாற்றி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஜி., கல்வி தரம் குறைவு: பலருக்கு வேலை கிடைக்கவில்லை

இன்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து, படித்து முடித்து வௌ?யே வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனினும், அவர்களில் பலருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, தொழில்நுட்ப கல்வி, தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான், தொழில் துறை வளர்ச்சி அடையும்.

பெண்களின் பாதுகாப்பிற்காக மைக்ரோசாப்ட் புதிய திட்டம்

பணி இடங்கள் மற்றும் பயணங்களின் போது, பெண்கள், தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறைகளிலிருந்து, பாதுகாத்து கொள்வதற்காக, முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது.உடனடி தகவல்இந்தியாவுக்கான, 'மைக்ரோசாப்ட்' நிறுவன இயக்குனர், ராஜ் பியானி கூறியதாவது:பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன. 
இதிலிருந்து, பெண்கள், தங்களை காத்துக் கொள்ள, மைக்ரோசாப்ட் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து உள்ளது.மொபைல் போன்களில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாகும்போது, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.ஆபத்து காலத்தில், மொபைல் போனில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால், மொபைல் போனில் உள்ள அனைத்து தொடர்பு எண்கள், போலீஸ், பாதுகாப்பு நிறுவனங்கள், பேஸ்புக் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் அனுப்பப்படும்.
டிராக்கிங் சிஸ்டம் : இதில் உள்ள தொடுதிரை வசதியின் மூலம், நடக்கும் காட்சிகள் பதிவு செய்யப்படும். இதன் மூலம், குற்றவாளிகளை எளிதாக கண்டறிய முடியும். அதுமட்டுமின்றி, இணையதள வசதி இல்லாமலும், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியும். இதில் உள்ள, 'டிராக்கிங் சிஸ்டம்' மொபைல் போனை பயன்படுத்தும் நபர் எங்கு உள்ளார் என்பதை, அனைவருக்கும் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


பள்ளிகளில் செக்ஸ் கல்வி தேவையில்லை : ஆந்திர ஐகோர்ட் நீதிபதி பேச்சு


 பள்ளிகளில் செக்ஸ் கல்வி, மாணவர்களின் மனதை சிதைத்து விட்டது. அந்த கல்வி திட்டத்தால், மாணவர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை என, ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார்.
கருத்தரங்கில் தகவல் : ஐதராபாத்தில் நடந்த, குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பது தொடர்பான கருத்தரங்கில் பேசிய, மாநில உயர் நீதிமன்ற நீதிபதி, எல்.நரசிம்ம ரெட்டி பேசியதாவது:
மாநில உயர்நிலைப் பள்ளிகளில், 2005 - 06ம் ஆண்டு முதல், செக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அது, மாணவர்கள் மனதை சிதைத்து விட்டது. அதைத் தவிர, அந்த திட்டத்தால், மாணவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.பெற்றோர் கையில் உள்ளது மாணவர்களை நன்னெறிப் படுத்துவது, பெற்றோர் கையில் தான் உள்ளது. அவர்களால் தான், மாணவர்களை நல்ல முறையில் வளர்க்க முடியும்.தங்கள் குழந்தைகளுக்கு, பெற்றோர், முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், ஐதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கல்யாண் ஜோதி சென்குப்தா, டி.ஜி.பி., பிரசாத் ராவ் கலந்து கொண்டனர்.

நேர்மையான பணியால் 'ஹாட்ரிக்' விருது: திருச்சி கலெக்டருக்கு குவியும் பாராட்டு


 நேர்மையான பணியாலும், பாரபட்சமில்லா நடவடிக்கையாலும், நிர்வாகத் திறமையாலும், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீக்கு, தொடர்ந்து மூன்று முறை, தமிழக அரசின் சிறந்த கலெக்டர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, பல சமூக நல அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், பாராட்டு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில், 2011ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. ஜூன் மாதம், திருச்சி மாவட்ட கலெக்டராக, ஜெயஸ்ரீ பொறுப்பேற்றார். பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை, மாவட்ட நிர்வாகத்தில், பல வளர்ச்சி பணிகளைச் செய்துள்ளார்; மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாநிலம் முழுவதும் மரக்கன்று நடும் திட்டத்தை தீவிரப்படுத்த, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு, திருச்சி மாவட்டத்தில், 1.60 லட்சம் மரக்கன்றுகள் நட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விஞ்சி, 2.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல, நடப்பாண்டு, 2 லட்சம் என்ற இலக்கை விஞ்சி, 8.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மத்திய, மாநில விருதுகள் முதல்வர் தனிப்பிரிவு மனு மீது, துரிதமாக நடவடிக்கை எடுத்ததற்காக, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், மூன்று முறை தொடர்ந்து, 'ஹாட்ரிக்' விருது பெற்றுள்ளார். இதற்கிடையே, 100 நாள் வேலை திட்டத்தில், ஆவணங்களை முறையாக பராமரித்ததற்காக, பிரதமர் மன்மோகன் கையால், மத்திய அரசின் விருது கிடைத்தது.


மேடையை நிராகரித்த கலெக்டர்:




திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், கஷ்டப்பட்டு, மேடை ஏறி வந்து தான், மனு அளிப்பர். மாற்றுத் திறனாளிகள் கஷ்டப்படுவதைக் கண்ட கலெக்டர், பதவியேற்ற சில நாட்களிலேயே, மாற்றுத் திறனாளிகளுக்காக, கீழே அமர்ந்து மனு பெறுவதாகக் கூறினார். அரசு அதிகாரிகள், ஊழியர்களில் தவறு செய்பவர்கள் இருப்பர் என்பதை நன்கு உணர்ந்த கலெக்டர் ஜெயஸ்ரீ, தனக்கு கீழ் பணியாற்றுபவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, அவ்வப்போது அவர்களுக்கு அறிவுறுத்துவார். மீறி யாராவது தவறு செய்தால், அவர்களை பதவி, பணியிலிருந்து தூக்கியடிக்க, சிறிதும் தயங்கமாட்டார். யார் மீது புகார் வந்தாலும், கடும் எச்சரிக்கை விடும் கலெக்டர், புகாரில் உண்மைத்தன்மை இருப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியது இல்லை. சாதாரண மக்கள், தங்கள் மாவட்ட கலெக்டரைச் சந்திப்பது, எளிதான காரியமில்லை. ஆனால், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீயை, எப்போதும் பொதுமக்கள் சந்திக்கலாம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை கண்டால், உற்சாகமாகும் கலெக்டர், நற்சிந்தனையை தூண்டும் வகையில், அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்; பல இடங்களில், பாடமும் நடத்தியுள்ளார். திருச்சி மத்திய மண்டலத் தில் உள்ள, எட்டு மாவட்டங்களில், இவருடன், கலெக்டர்களாக நியமிக்கப்பட்ட பலரும், மாற்றப்பட்ட நிலையில், இவர் மட்டுமே, தொடர்ந்து, திருச்சி கலெக்டராக பணியில் உள்ளார். இதற்கு திருச்சி மாவட்ட பல்வேறு சமூக அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் போது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - 43வது சர்வதேச தபால்துறை "கடிதம் எழுதும்" போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட BRC / CRCகளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 115 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் 31.12.2013 அன்று பிற்பகல் 2மணியளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெறும்

Monday, 30 December 2013

தமிழ்நாடு கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ள ஏர்செல் நிறுவனத்தின் Teachers CUG திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ள ஏர்செல் நிறுவனத்தின் Teachers CUG திட்டம் அறிமுகம்

இத்திட்டத்தை வழங்குபவர்கள்:
Kaveri Communications, Trichy.

இத்திட்டத்தில் இணைந்துள்ள ஆசிரியர்கள் தங்களுக்குள் 24 மணிநேரமும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். ஒரு ஆசிரியர் குடும்ப உறுப்பினர்களிடம் இலவசமாக பேசிக்கொள்ள (தேவைபட்டால்) 3 சிம் கார்டுகள் வரை கூடுதலாக தரப்படும்.

இந்த 3 சிம்கார்டுகளில் இருந்தும் இத்திட்டத்தில் இணைந்துள்ள தமிழ் நாட்டில் உள்ள எந்த ஆசிரியரிடமும் பேசினால் முற்றிலும் இலவசம்.

Scheme Details:
Monthly Rental Rs.149 + 12.31% Tax (Nearly Rs.167 per month)
CUG numbers Unlimited Talk Time Free
Other Numbers 400 Mints Free
More than 400 Mints, 30 paise per Mint
250 Aircel to Aircel SMS free
2G internet - 500 mb free

Deposit Rs. 250 only

ஆசிரியர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களும் இருக்கின்றன

More Details Pls Contact:
Miss. Vijaya Lakshmi, Mobile 98424 01531

முடிந்தது நெட் தேர்வு: வழக்கு தொடர்ந்த மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள்

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்வையற்ற மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்ற பிற பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த பிரத்யேக வினாத்தாள் வழங்கப்படவில்லை.
யுஜிசி நடத்தும் உதவிப் பேராசிரியர் பணிக்கான "நெட்' தகுதித் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வெழுதினர். சென்னையில் 13 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 47 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மிராண்டா டாம்கின்ஸன் என்பவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "நெட்' தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி முறை வினாத்தாள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
270 பார்வையற்றோர் பங்கேற்பு:
ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "நெட்' தேர்வில் தமிழகத்தில் மட்டும் 270-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றபோதும், வழக்கு தொடர்ந்த மிராண்டாவுக்கு மட்டும் பிரெய்லி முறை வினாத்தாள் வழங்கப்பட்டது.
இவர் தேர்வெழுதிய எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கல்லூரி மையத்தில் தேர்வெழுதிய மற்ற பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த பிரத்யேக வினாத்தாள் வழங்கப்படவில்லை.
அவர்கள் அனைவரும் வழக்கம்போல், உதவியாளர் ஒருவரின் உதவியுடனே தேர்வெழுதினர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பார்வையற்ற தேர்வர் கூறியது:
பிறரது உதவியுடன் தேர்வெழுதும்போது, தவறாக பதிலளிக்க வாய்ப்புள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களால்தான் பிரெய்லி முறை வினாத்தாள் வழங்க வேண்டும் என மிராண்டா டாம்கின்ஸன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மிராண்டாவுக்கு மட்டுமே பிரத்யேக வினாத்தாள் வழங்கியிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
எனவே, வரும் காலங்களில் பார்வையற்ற மாணவர்கள் அனைவருக்கும் பிரெய்லி வினாத் தாள் வழங்க யுஜிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து யுஜிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தாலேயே வழக்கு தொடர்ந்த மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள் வழங்கும் நிலை ஏற்பட்டது. வரும் காலங்களில் தேவைப்படும் எண்ணிக்கையில் இந்த வினாத் தாள்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்றார்.

முதுநிலை தமிழாசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்


அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக  ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது.அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடந்தது. தமிழ் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழாசிரியர்கள் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 11ம் தேதி வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் தகுதியுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒரு பதவிக்கு ஒருவர் வீதம் சான்று சரிபார்ப்பு நடத்துவதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 23ம் தேதி இணைய தளத்தில் வெளியிட்டது. இதையடுத்து  அழைப்பு கடிதங்களையும் இணைய தளத்தில் வெளியானது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் தேர்வு எண்ணை பதிவு செய்து இணைய தளத்தில் இருந்து அழைப்புக் கடிதங்கள் மற்றும் கவுன்சலிங்கில் பங்கேற்கும் போது பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய படிவங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சான்று சரிபார்ப்பின் போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு  வெயிட்டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட மதிப்பீடுகளுக்கு பிறகு இறுதி தெரிவு பட்டியல் வெளியிடப்படும். 

முதுநிலை பட்டதாரி தமிழாசிரியர்களுக்கான தேர்வை 32,000 பேர் எழுதினர். தற்போது மேல்நிலை பள்ளிகளில் காலியாக  உள்ள 602 இடங்களில் மேற்கண்ட தமிழாசிரியர்களை நியமிக்க 649 பேர் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். டிஆர்பி நடத்தும் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான கவுன்சலிங் பெரும்பாலும் சென்னையில்தான் நடப்பது வழக்கம். ஆனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் வெளி மாவட்டங்களில் இப்போது கவுன்சலிங் நடக்கிறது. 

சான்று சரிபார்ப்பு நடக்கும் இடங்கள்:

* மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி- மதுரை, தெப்பகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலை பள்ளி.

* சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர்- சேலம், சூரமங்கலம், ஸ்ரீராமகிருஷ்ணா சாரதா மேல்நிலை பள்ளி.

* திருச்சி, கரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை- திருச்சி, புதூர், பிஷப் ஹீப்பர் மேல்நிலை பள்ளி.

* விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை- விழுப்புரம், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி.

* வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி-வேலூர், ஊரிஸ் மேல்நிலை பள்ளி.