ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும், பள்ளிகள், இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை, ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று, அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், செய்முறை தேர்வு குரூப் கொண்ட மாணவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள், தேர்வு பதிவு எண் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி, முதல் வாரத்தில் இருந்து, செய்முறைத் தேர்வு துவங்கிவிடும் என்பதால், இந்த ஒரு மாதம் வரை மட்டுமே, பள்ளிகள், முழுமையான அளவில் செயல்படும்.
உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook
Flash News
Flash News
Thursday, 2 January 2014
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' - அரசு உத்தரவு
'அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ் எழுத்துருக்களை, http://tamilvu.orgல், 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
மாநிலம் முழுவதும் ஒரே துறை: சத்துணவு பணியாளர் ஆசை
'அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., சத்துணவு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் கோரிக்கை:
பள்ளி சத்துணவு, குழந்தைகள் நலன், அங்கன்வாடி உள்ளிட்ட, அனைத்து சத்துணவு அமைப்பாளர் களையும், முழுநேர ஊழியராக்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில், அரசின் பிற துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களில், பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும். பணியில் ஓய்வு பெறும் போது, வழங்கப்படும் ஒட்டுமொத்த ஓய்வு ஊதியத்தை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, அடிப்படை ஊதியத்துடன், 1,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.
'கவுன்சிலிங்கில்' மறைக்கப்பட்ட காலியிடங்கள்: கோர்ட்டுக்கு செல்ல ஆசிரியர் பயிற்றுனர்கள் முடிவு
தமிழகத்தில் நடந்த ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பல்வேறு காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதால் விரக்தியுற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், கோர்ட்டில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 115 ஆசிரியர் பயிற்றுனர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றி, அரசு உத்தரவிட்டது. இவர்களுக்கு, டிச.,31ல், மாநிலம் முழுவதும் மாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதில் பல இடங்கள் மறைக்கப்பட்டதால், சொந்த மாவட்டங்களில் 90 சதவிகிதம் வரையான காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், பலர் தொலைதூர மாவட்டங்களில் பணியேற்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். ஆசிரியர் பயிற்றுனர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: எந்த முன்னறிவிப்பும் இன்றி மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்றியதால் மன உளைச்சலில் உள்ளோம். இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கான நடந்த கவுன்சிலிங்கில் மேலிட உத்தரவுப்படி காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளது. டிச., 28ல், 961 பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால், டிச.,31ல் நடந்த கவுன்சிலிங்கில் அந்த பணியிடங்கள் காண்பிக்கப்படவில்லை. மறைக்கப்பட்ட பணியிடங்களுக்கு தற்போது பேரம் நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து நியாயம் கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர உள்ளோம், என்றனர்.
செயல்வழிக் கற்றல் - தமிழ் - முதல் வகுப்பு - படிப்போம் எழுதுவோம் அட்டைகளில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள், எழுத்துக் கூட்டி படிக்கும் விதமாக, வார்த்தைகளுக்கு உரிய விளக்கப் படங்களுடன் வீடியோ வடிவில். இந்த காணொளிக் காட்சியை பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் காண்பிக்கும் போது மாணவர்கள் ஆர்வமுடன் கற்பர். ஆசிரியரின் பணிச்சுமை குறையும். மெல்லக் கற்போரும் பயன் பெறுவர். தரமான கற்றல் நிகழும். காட்சியாக காண்பதால் மனதில் நிலைத்து நிற்கும்.
Wednesday, 1 January 2014
மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் கலெக்டர் தகவல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்று கலெக்டர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
2013-2014-ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மத்திய, மாநில அரசு வழங்கும் போஸ்ட் மெட்ரிக்(பிளஸ்-1 முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை) கல்வி உதவித்தொகையானது மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் நேரடியாக மின்னணு தீர்வை மூலம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
எனவே, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளும் தேசிய மயமாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வங்கி செயல்பாடு வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்.
20-ந் தேதிக்குள்...
மத்திய, மாநில அரசு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் தங்களின் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்லூரி நிறுவனங்கள் மூலம் வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.2½ லட்சம் ஆகும். மேலும் 2012-13-ம் கல்வியாண்டில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 1074 மதிப்பெண்களும், மாணவிகள் 1085 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும் தாங்கள் படிக்கும் கல்லூரி மூலமாக தமிழக முதல்-அமைச்சரிடம் தகுதி பரிசு பெறுவதற்கு வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொடிநாள் வசூலிப்பதில் திருச்சி முதலிடம்
கொடிநாள் வசூலில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடத்தை வகிக்கிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரன்.
மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
சிறப்புமிக்க பணியாற்றும் ராணுவ வீரர்களின் தியாகத்துக்கும், தன்னலமற்ற சேவைக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 7.367 முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கும்,. நாட்டுக்காக போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர் மறுவாழ்விற்கும், எதிரிகள் மற்றும் தீவிரவாதிகளுடன் போரிடும்போது உயிரிழந்த மற்றும்உடல் ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனுக்காகவும் இத்தொகை செலவிடப்படுகிறது.
கடந்தாண்டில் மட்டும் ரூ.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடந்தாண்டில் அரசு நிர்ணயித்த இலக்கான ரூ.33 லட்சத்தையும் தாண்டி, ரூ. 2.28 கோடி தொகை மாவட்டத்தில் வசூலிக்கப்பட்டது என்றார் மாவட்டஆட்சியர்.
முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கொடிநாள் வசூலில் அதிக நிதி வசூலித்த அரசுத் துறைத் தலைமை அலுவலர்களுக்கு கேடயங்களை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிபதி ஏ.பி. பாலச்சந்திரன் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியது: தன்னலம்பாராமல் நாட்டுக்கு உழைத்த படைவீரர்கள்
தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக மாவட்ட நிர்வாகத்தை அணுகி பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்றார் மாவட்ட முப்படைவீரர் வாரிய துணைத் தலைவர் பி. நாராயணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் க. தர்ப்பகராஜ், மாநகராட்சி ஆணையர் வே.ப.தண்டபாணி, திட்ட இயக்குநர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சோ. செல்வமூர்த்தி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குநர் க. முத்துசாமி நன்றி கூறினார்.
ரூ.2 லட்சம் வரை அனுமதி : ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்
அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்துவதை போல, ஓய்வூதியர்களுக்கு தனியாக மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விரிவான ஆய்வு செய்து ஓய்வூதியர்கள், அவர்களின் மனைவி அல்லது குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அனைத்து ஓய்வூதியர்கள், அவரது மனைவிகள் அல்லது குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் செயல்படுத்தப்படும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்த புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு அமலில் இருக்கும் 4 ஆண்டுகள் வரை ஸீ2 லட்சம் வரை காப்பீடு உதவி பெற முடியும்.
ஓய்வூதியரின் மனைவியும் ஓய்வூதியராக இருக்கும் பட்சத்தில் யாராவது ஒருவரிடம் இருந்து மட்டுமே காப்பீடு திட்டத்துக்கான தொகை பிடித்தம் செய்யப்படும்.
மாணவர்கள் சேர்க்கை சரிந்தது : ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடங்க ஆர்வம் இல்லை
ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பி.எட் கல்லூரிகள், உடற்கல்வி கல்லூரிகள் ஆகியவற்றை புதியதாக தொடங்க வேண்டும் என்றால் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்திடம்(என்சிடிஇ) அனுமதி பெற்று மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். அப்படி தொடங்கப்படும் கல்லூரிகள் பள்ளிகள் அனைத்தும் என்சிடிஇ விதிகளுக்கு கட்டுப்பட்டவை. இந்நிலையில் 2009ல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கும்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவித்தது.
அதனால் பி.எட் படித்தவர்கள் தகுதித் தேர்வு எழுத ஆர்வம் காட்டினர். மேலும் பி.எட் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேரத் தொடங்கினர். ஆனால் 2010-11ல் என்சிடிஇ, 13 மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகள் தொடங்குவதை நிறுத்தி வைத்தது. புதிய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் இயங்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து பெறும் சான்று தமிழகத்தில் செல்லாது என்று அரசு தெரிவித்துவிட்டது. மேலும், தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியாலும், தகுதித் தேர்வு எழுதித்தான் ஆசிரியர் வேலை பெற முடியும் என்ற நிலையும் ஏற்பட்டதால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சரியத் தொடங்கியது. அவற்றின் மவுசு குறையத் தொடங்கியது.
இதனால் கடந்த ஆண்டில் 100க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன. தற்போதைய நிலவரப்படி அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 33, நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 40 மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 450 தான் உள்ளன. ஏற்கனவே தனியார் ஆசிரியர் பள்ளிகள் 750க்கும் மேற்பட்டவை இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் சில கட்டுபாடுகளை கொண்டுவருவது தொடர்பாக புள்ளி விவரங்களை என்சிடிஇ சேகரிக்கத் தொடங்கியது. இதற்காக கடந்த ஜூலை மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் அனைத்து ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் தங்கள் பள்ளி பற்றிய அனைத்து விவரங்களையும் என்சிடிஇக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதை சரிபார்த்த பிறகு புதிய பள்ளிகள் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துவிட்டது.
ஆனால் தமிழகத் தில் உள்ளநிலையை அறிந்த தனியார்கள், புதிய பள்ளிகள் தொடங்க யாரும் விருப்பம் காட்டவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் வரவில்லை என்று என்சிடிஇ தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆண்டும் சில தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி களை மூட திட்டமிட்டுள்ளனர்.
தவிரவும், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகளில் குறைந்த அளவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டும் தனியார் பள்ளிகள் மூடப்பட் டால் அரசுப் பள்ளிகளில் மொத்தமே 4000 பேராவது படிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறை ந்த பட்ச மாணவர்களை வைத்துக் கொண்டு அரசுப் பள்ளிகளை எப்படி நடத்துவது என்று அரசும் யோசித்து வருகிறது.
அதனால் வரும் காலத்தில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் மூடப்படும் சூழல் ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எக்ஸ்ட்ரா தகவல்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மொத்தம் ரூ.63.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ரூ.65.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும்?
நவம்பர் 2013 மாத விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. 2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும். டிசம்பர் 2013 மாத விலைவாசி உயர்வு குறியீட்டு எண் 31.01.2014 அன்று வெளியிடப்படும். அதன் பிறகே அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயரும் என்பது உறுதியாக தெரிய வரும். எப்படிப்பார்த்தாலும் 01.01.2014 முதல் அகவிலைப்படி 100%க்கு குறையாது என உறுதியாக நம்பலாம். ஜன'வரி' மாதம் வந்தாலே வரியை நினைவில் கொள்ளுங்கள். (தொழில் வரி, வருமான வரி).
தமிழகத்தில் 'ஆதார்' எண் பணி ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில், ஆதார் எண் உருவாக்கும் பணி, 50 சதவீதத்துக்கும் கீழ் இருப்பதால், ஜனவரி இறுதி வரை, இப்பணி நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை, இம்முடிவை எடுத்துள்ளது.
ஆதார் அட்டை உருவாக்கும் பணி, நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆதார் அட்டை தயாரிப்பதற்கு முன், ஒவ்வொரு குடிமகனுக்கும், தனி எண் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, புகைப்படம் எடுத்தல், கைவிரல் ரேகை பதிவு, விழிரேகை பதிவு ஆகியவை, தமிழகத்தில், 2011 ஜனவரியில் துவங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் இப்பணி நடக்காமல், சில மாவட்டங்களைத் தேர்வு செய்து முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இப்பணி நீட்டிக்கப்பட்டு, நடந்து வருகிறது.
ஆதார் எண் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில், 70 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டிருந்தால், அம்மாவட்டத்தில் ஆதார் எண் உருவாக்கும் பணி நிறுத்தப்படுகிறது.
இதன்பின், நிரந்தர ஆதார் மையங்கள் துவங்கப்பட்டு, விடுபட்டவர்களுக்கு ஆதார் எண் உருவாக்கும் பணி நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.
சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் இறுதி கட்டத்தில், ஆதார் எண் உருவாக்கும் பணி துவங்கப்பட்டது.
இதில், சென்னை மாவட்டத்தில், 42 சதவீதம் பேருக்கே, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக துவங்கப்பட்ட மாவட்டங்கள் எதிலும், 70 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படவில்லை.இந்நிலையில், டிச., 31ம் தேதியுடன், ஆதார் எண் உருவாக்கும் பணி முடிக்கப்படும். இனிமேல், நிரந்தர மையங்கள் துவங்கி, ஆதார் எண் உருவாக்கும் பணி நடக்கும் என, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை அறிவித்திருந்தது.
தமிழகத்தில், இறுதியாகத் துவங்கிய மாவட்டங்களில், 70 சதவீத இலக்கு எட்டப்படாத நிலையில், ஆதார் எண் உருவாக்கும் பணியை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜனவரி, 31ம் தேதி வரை, ஆதார் எண் உருவாக்கும் பணியை நீட்டிக்க, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், அரியலுார், நாகபட்டினம் மாவட்டங்களில், ஆதார் எண் உருவாக்கம், 80 சதவீதத்தை கடந்துள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆதார் எண்ணை நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு அடிப்படையாக மற்றும் ஏற்க வசதியாக, ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர்களில் ஏற்படும் தவறுகளை திருத்தவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில், 42 சதவீதம் பேருக்கே, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக துவங்கப்பட்ட மாவட்டங்கள் எதிலும், 70 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படவில்லை
இணையதளம் மூலம் 288 பள்ளிகள் ஒருங்கிணைக்கும் திட்டம் : முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கம்
மாநிலம் முழுவதும் இணையதளம் மூலம் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் குறித்த முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம், அறிவுசார் பள்ளிகள், இ.ஐ.எம்.எஸ்., கணினி உதவியுடன் கற்பதற்கான மொழி ஆய்வகங்கள், இணையதள வழி கண்காணிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்போது, இணையதளம் மூலம் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை ( கனெக்டிங் கிளாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 160 <உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளிலும், 128 நடுநிலை பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில், இத்திட்டத்தை செயல்படுத்த ஐந்து குழுக்கள் நிர்வாக அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான, பயிற்சிகளை கோவை, திருச்சி, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நான்கு மண்டலங்களாக பிரித்து வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் அரசு துணி வணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இப்பயிற்சி மற்றும் முன்னோட்ட பணிகளுக்கான பரிசோதனை நடந்தது. முன்னோட்ட பணிகளுக்காக, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில், இத்திட்டத்திற்காக தேர்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் 174 பேர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் தேர்வு பெற்ற கணுவாய், கவுண்டம்பாளையம், கணபதி உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளை இணையதளம் மூலம் ஒருங்கிணைத்து பரிசோதனை செய்யப்பட்டதுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில்,"" இத்திட்டத்தில் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுத்தப்படுவதுடன் ஆசிரியர்களின் கற்பிக்கும் தரமும் மேம்படுத்தப்படும்.
""இதற்கான முன்னோட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் தமிழக முதல்வர் அதிகார பூர்வமாக துவக்கிவைப்பார், '' என்றார்.
சளி, காய்ச்சலா? டயல் செய்யுங்க '104'
பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே, மருத்துவ ஆலோசனை பெறும் வகையில், புதிய மருத்துவ சேவை திட்டம், '104' என்ற போன் இணைப்பு எண்ணில், துவக்கப்பட்டுள்ளது. இதில், 104 என்ற இந்த போன் எண்ணில் தொடர்பு கொண்டால், டாக்டர்கள் குழு, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கும். தமிழகத்தில், அவசர கால, ஆம்புலன்ஸ் வசதிக்கு, '108' என்ற போன் எண்ணில் தகவல் தெரிவித்தால், உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் வீடு வந்து சேரும். இந்தச் சேவைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, '104' என்ற போன் எண்ணில் தொடர்பு கொண்டால், முதலுதவி சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் தரும் புதிய சேவைத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, புத்தாண்டு பரிசாக, இச்சேவையை துவக்கியுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 1.2 கோடி ரூபாய் அரசு நிதி அளிக்கிறது. இத்திட்டமும், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் திட்டத்தை, செயல்படுத்தும், 'ஜிவிகே' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, உடல்நல பாதிப்பு குறித்து தெரிவித்தால், நோயின் தன்மைக்கேற்ப, டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை தருவர். முதலுதவி ஆலோசனை மட்டுமின்றி, எந்த மாதிரியான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், தெரிவிப்பர். கர்ப்ப கால பிரச்னைகள், மாதவிடாய், மார்பக புற்றுநோய் குறி?த்து பெண்கள் பேசினால், விளக்கம் அளிக்க, பெண் டாக்டர்களும் உள்ளனர். மன அழுத்தம், மன சிதைவால் தற்கொலை முயற்சிக்கு செல்வோர், '104' போன் எண்ணை டயல் செய்தால், 'கவுன்சிலிங்' தரப்படும்.
பொது தேர்வு பொறுப்பாளர் நியமனம்: தேர்வுத்துறை இனி தேர்ந்தெடுக்கும்
: தேர்வுத் துறையில், புதிய விடைத்தாள் அறிமுகம், வினாத்தாள் வினியோகத்தில் மாற்றம், 400 மாணவர்களுக்கு ஓர் தேர்வு மையம் என, பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், தேர்வு மையங்களுக்கான துறை அலுவலர்கள், தலைமை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித் தேர்வாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புக்களுக்கான ஆசிரியர்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு செய்வர். இந்த ஆண்டு முதல், இது நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, பணிமூப்பு அடிப்படையில், பிளஸ் 2 தேர்வுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பிற்கு, பட்டதாரி ஆசிரியர்கள் என, பட்டியல் தயாரித்து, இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தலைமை தேர்வாளர்கள், பறக்கும் படையில் இடம் பெறுவோர் என அனைத்து முக்கிய பொறுப்புகளில் இடம் பெறுவோரை, தேர்வு துறை இயக்குனரே முடிவு செய்வார். இதன் மூலம், ஒரு சில கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே நீடிக்கும் 'இணக்கமான உறவு' முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று, ஒரே நாளில் மட்டும்,1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு
நேற்று, ஒரே நாளில் மட்டும், 1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு, உடன் பணியாற்றிய ஊழியர்கள், பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர்.
தமிழகத்தில், கல்வி, எரிசக்தி, வருவாய், மருத்துவம், உணவு உள்ளிட்ட, 37 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அதிகாரிகள், ஊழியர்கள் என, 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதில், 1 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், 2013 - 2014ம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று, ஓய்வு பெற்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் உணவு, கால்நடை, தொழிலாளர் நலன், கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த, 1,000க்கும் அதிகமான ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)