Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 3 August 2014

INSPIRE AWARD BASIC DETAIL FORM

ONLINE ENTRY  FORMAT

CLICK  : SCHOOL SUPPORT
AFTER FILLING THE APPLICATION CLICK SAVE AND NEXT   
CLICK   : OK

LAST  STEP : CLICK APPROVAL

INSPIRE AWARD க்கு எப்படி விண்ணப்பிப்பது? பவர் பாயிண்ட் விளக்கம்

INSPIRE AWARD க்கு எப்படி விண்ணப்பிப்பது? பவர் பாயிண்ட் விளக்கம்
LAST DATE AUGUST 10
THANKS TO Mr.ANBALAGAN, SCIENCE BT, KANJEEPURAM DIST.

Saturday, 2 August 2014

டூவீலர்களில் "பறக்கும்' மாணவ, மாணவியர்: காற்றில் பறந்தது, கல்வித்துறை சுற்றறிக்கை


பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் டூவீலர் ஓட்டி வரக்கூடாது என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவு, திருப்பூரில் அப்பட்டமாக மீறப்படுகிறது. போக்குவரத்து விதிமுறையை மீறி, ஏராளமான மாணவ, மாணவியர், டூவீலர்களில் வந்து செல்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய, பள்ளி நிர்வாகங்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

விடலை பருவத்தில் உள்ள மாணவ, மாணவியர், "இளம்கன்று பயம் அறியாது' என்ற பழமொழிக்கு ஏற்ப எதிலும், வேகத்தையும், வீரத்தையும் காட்ட விரும்புகின்றனர். டூவீலர் ஓட்டும்போது, கட்டுப்பாடில்லாத அதிவேகத்தில் செல்வதும், குறுகலான சந்துகளில் முரட்டு வேகத்தில் வாகனம் ஓட்டுவதை, பெரிய சவாலாக கருதுகின்றனர். "டீன் - ஏஜ்' வயதுக்கு உரிய அறியாமை, ஆர்வக்கோளாறில், மாணவ, மாணவியர் பாதுகாப்பின்றி, டூவீலர் ஓட்டுவது, சில நேரங்களில் விபத்தாக மாறுகிறது; உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.பிள்ளைகள் மீது கொண்ட அதீத பாசத்தாலும், அவர்களது வற்புறுத்தலாலும் சில பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு டூவீலர் வாங்கி தருகின்றனர். 18 வயது பூர்த்தியடைந்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்பே வாகனம் இயக்க வேண்டும் என்ற மோட்டார் வாகன சட்டம், மாணவர்களை பொருத்தவரை, காற்றில் பறக்கிறது. சீருடையில் வாகனம் ஓட்டி வரும் மாணவ, மாணவியரை, போலீசாரோ, வட்டார போக்குவரத்து அலுவலர்களோ கண்டுகொள்வதில்லை. பெரும்பாலான மாணவ, மாணவியர், ஹெல்மெட் அணிவதில்லை. தங்களது நண்பர்களையும் ஏற்றிக்கொண்டு, டூவீலர்களில் பறக்கின்றனர்.

திருப்பூர் குமரன் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, பி.என்., ரோடு, அவிநாசி ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில், போக்குவரத்தான பகுதிகளிலும் மாணவர்களின் டூவீலர்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. அவர்கள், வளைந்து, நெளிந்து செல்லும் வேகம், ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை பதைபதைக்கச் செய்கிறது. சில மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு, டூவீலர்களில் பாய்வது, மற்றவர்களை பீதியடைய வைக்கிறது.

"பள்ளிக்கு மாணவ, மாணவியர் டூவீலர் ஓட்டி வர அனுமதிக்கக் கூடாது; 18 வயது நிறைவடையாமல், ஓட்டுனர் உரிமம் பெறாமல் பள்ளிக்கு மாணவர் டூவீலர் ஓட்டி வரும் பட்சத்தில், சாவியை பெற்றுக்கொண்டு, பெற்றோரை வரவழைத்து, அவர்களிடம் வாகனத்தை தலைமை ஆசிரியர் ஒப்படைக்க வேண்டும். இதில், அலட்சியம் காட்டி, மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில், தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்,' என, பள்ளி கல்வித்துறை தரப்பில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையை, பள்ளி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் உள்ளன. சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியதோடு, கடமை முடிந்து விட்டது என கல்வி அதிகாரிகள் அக்கறை காட்டாமல் உள்ளனர்.

முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது,""இதுதொடர்பாக, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும்; எந்தெந்த பள்ளிகளில், டூவீலர்களில் மாணவ, மாணவியர் வருகின்றனர் என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசுவிடம் கேட்ட போது, ""சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், பள்ளிகளில் சாலை பாதுகாப்பு படை ஏற்படுத்தப்படுகிறது. வாகனம் ஓட்டும்போது, யாராக இருந்தாலும் உயிர் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறையை மீறுவது சட்டப்படி குற்றம். விதிமுறை மீறுவோர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மத்திய அரசு நிதியில் ஆறு கல்வி திட்டங்கள்


சட்டசபையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், வீரமணி அறிவித்த புதிய அறிவிப்புகளில், 6 திட்டங்கள், மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி, அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 17ல், பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, துறை அமைச்சர், வீரமணி, சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 8ம் வகுப்பு வரை படித்து, படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிப்பது; 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, விளையாட்டு சாதனங்கள் வழங்கு வது உட்பட பல திட்டங்களை, அமைச்சர் வெளியிட்டார். மேலும், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள மாணவர்களுக்கு, 1.63 கோடி ரூபாய் செலவில், சிறப்பு பயிற்சி அளித்தல் உட்பட, 6 வகையான திட்டங்கள், மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி அமல்படுத்தப்பட உள்ளது.

மழலையர் பள்ளிகள் விவகாரம் என்ன? : அரசின் நடவடிக்கையை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு


உரிய நடைமுறைகளை பின்பற்றாத, மழலையர் பள்ளிகள் தொடர்பான, அரசின் நடவடிக்கையை, அட்டவணையாக தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், தாக்கல் செய்த மனு:

ரூ. 30 ஆயிரம் : தமிழகத்தில், தனியார் பள்ளிகள் அங்கீகார சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், அரசின் அங்கீகாரம் பெற வேண்டும். தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட, மழலையர் பள்ளிகள், அரசின் அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன. சென்னையில் மட்டும், 700க்கும் மேற்பட்ட, மழலையர் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் இல்லை. ஆனால், அங்கீகாரம் பெற்றுள்ளதாகக் கூறி, ஓராண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கின்றனர். பல பள்ளிகளுக்கு, சொந்தமாக கட்டடம் இல்லை; கட்டட உறுதி சான்றிதழும் இல்லை. எனவே, விதிமுறைகளை கடைபிடிக்காத, சட்ட விரோத, மழலையர் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க, உத்தரவிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், குழந்தைகளை மாற்ற வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

வசதிகள் இல்லை : மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், ''அங்கீகாரம் இல்லாமல், மழலையர் பள்ளிகள் நடத்த முடியாது. அடிப்படை வசதிகள் இல்லாமல், பள்ளிகள் நடத்தப்
படுகின்றன,'' என்றார். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகினர். பள்ளிகள் தரப்பில், வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மனுவை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த, இடைக்கால உத்தரவு: கோரிக்கை
தனியார் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வெவ்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். குழந்தைகளை கவனிக்கும் மையமாகச் செயல்படுவதால், தனியார் பள்ளிகள் அங்கீகார சட்டம், தங்களுக்கு பொருந்தாது என்று சிலரும், ஏற்கனவே அங்கீகாரம் பெற்று விட்டதாக சிலரும், தெரிவித்தனர். ஒவ்வொரு பள்ளியையும், நீதிமன்றம் ஆராய முடியாது. அது, அரசின் வரம்புக்கு உட்பட்டது. அரசின் நடவடிக்கை பற்றிய, கால அட்டவணையை தாக்கல் செய்வதாக, அட்வகேட் ஜெனரல் குறிப்பிட்டார்.

கால அட்டவணை : தேவையான விஷயங்களை பூர்த்தி செய்யாத பள்ளிகள் குறித்து சரிபார்க்க, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, அறிவுறுத்தல்கள் அனுப்பியிருப்பதாக, தெரிவிக்கப்பட்டது. இதனால், பூர்த்தி செய்யாத பள்ளிகள், கால அவகாசம் கோர, சந்தர்ப்பம் கிடைக்கிறது.
அதன்பின்னும், பூர்த்தி செய்யவில்லை என்றால் தான், பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கை எழும். எனவே, அடுத்த கட்ட விசாரணையின் போது, கால அட்டவணையை, அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. விசாரணை, இம்மாதம், 14ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர் நேரில் ஆஜராக ஆணை


கும்பகோணம் பள்ளித் தீ விபத்து தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தில் உள்ள

ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளி - சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீ விபத்து நடந்தது. அதில், 94 குழந்தைகள் இறந்தனர். 18 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அதிகாரிகளின் கவனக் குறைவால்தான் இந்த விபத்து நடந்தது என்பதால் அதிக இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைக்க உத்தரவிட்டார். அந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் இழப்பீடு வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தது சரிதான். இந்த உத்தரவின் நகல் கிடைத்த நாள் முதல், நான்கு மாதங்களுக்குள் ஒரு நபர் குழு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் கே.இன்பராஜ் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புதிய குழு அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத்தும் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதாவும் செப்டம்பர் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவி!


எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டாசுத் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளியாகப் பணியாற்றிய பாக்கியலட்சுமி, மீட்கப்பட்ட பின்னர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் சாதனை படைத்ததோடு பொறியியல் இசிஇ படிப்பிலும் இப்போது சேர்ந்திருக்கிறார்.

இவரைப்போல் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் 20-க்கும் மேற்பட்டோர் பல்வேறு பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் பணியை தேசிய குழந்தைத் தொழிலாளர் மீட்பு திட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 11,000 பேர் தமிழகம் முழுவதும் உள்ள 330 பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இவர்களில் 390 பேர் அண்மையில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதி, அதில் 370 பேர் தேர்ச்சியும் பெற்றனர்.

தேர்ச்சி பெற்றவர்களில் 27 பேர் 1,200-க்கு 1,000-க்கு மேல் மதிப்பெண் பெற்றும், 66 பேர் 900-க்கும் மேல் மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்தனர்.

இவர்களில் அதிகபட்சமாக 1,144 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த, கைத்தறித் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட, பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த கோபால், பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்பில் சேர்ந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 1,092 மதிப்பெண்கள் பெற்ற சிவகாசியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் பி.இ. இசிஇ படிப்பில் சேர்ந்துள்ளார். இவர் பட்டாசுத் தயாரிப்புத் தொழிலிலிருந்து மீட்கப்பட்டவர்.

இதுபோல் பட்டாசுத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட சிவகாசியைச் சேர்ந்த சரவணன் (1017), வீரபாப்ராஜ் (985) ஆகியோர் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்துள்ளனர். இதே கல்லூரியில் காளீஸ்வரி (1011) என்ற மாணவி இசிஇ பிரிவில் சேர்ந்துள்ளார்.

இவர்களைப் போல் விருதுநகர் மாவட்டத்திலிருந்து மீட்கப்பட்ட 4 குழந்தைத் தொழிலாளிகள், கிருஷ்ணகிரியிலிருந்து 3 பேர் என தமிழகம் முழுவதும் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

பொறியியல் கலந்தாய்வு முடிய சனிக்கிழமையோடு சேர்த்து இன்னும் 3 நாள்கள் உள்ளதால், மேலும் சிலர் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயர் கல்வியில் சேர்ந்துள்ள குழந்தைத் தொழிலாளிகளில் சிலருக்கு கல்விக் கட்டணத்துக்கான உதவிகள் கிடைத்துள்ளபோதும், பலருக்கு உதவிகள் கிடைக்கவில்லை. சிலர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றபோதும், பொருளாதார வசதி இல்லாததால் உயர் கல்வியில் சேர்வதையே தவிர்த்து வருவதாகவும் தேசியக் குழந்தைத் தொழிலாளர் மீட்பு திட்ட அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்பப் பொருளாதாரச் சூழலால் பள்ளி செல்லாமல் குழந்தைப் பருவத்தில் வேலைக்குச் சென்ற நாங்கள், அதே பொருளாதாரச் சூழலால் உயர் கல்வியைத் தவறவிட்டு விடுவோமா என்று அஞ்சுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள், தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் மீட்பு அலுவலகத்தை 044 - 24326205 என்ற தொலைபேசி எண்ணிலும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீட்ண்ப்க்ப்ஹக்ஷர்ன்ழ்ஃஹ்ஹட்ர்ர்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20,000 பேருக்குப் பயிற்சி


கணிதப் பாடங்களை எளிமையாக கற்பிப்பது தொடர்பாக ஒன்பது, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேருக்கு மாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகக் கற்பித்தல், கணித உபகரணங்களைப் பயன்படுத்துதல், நவீன முறையில் எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களுக்குக் கணிதத்தை விளக்குதல் போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தருமபுரி, கரூர், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய இடங்களில் கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி இப்போது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண்டல வாரியாக பயிற்சி பெற்ற இந்த கருத்தாளர்கள், மாவட்டங்களில் உள்ள சுமார் 20 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சியை வழங்குவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: காலக்கெடு நீட்டிப்பு

நாகர்கோவில், ஆக.1-6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் உள்ள வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கைநடத்த கால அவகாசம் வழங்கி கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு பொதுவாக ஜூலை31ம் தேதி வரை ஆகும். எனினும் 2014-15ம் கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6முதல் 12ம் வகுப்பு வரையிலும் மாணவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து ஆணையிடப்படுகிறது. இந்த உத்தரவை அனைத்துபள்ளிதலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து மாணவர்சேர்க்கை சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளஅனைத்து மாவட்ட ஆய்வு அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கணினி அறிவியல் படித்தவர்களும் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுமா?


-சட்டப்பேரவையில் வெள்ளியன்று (ஆக.1) துணைக் கேள்விகள் எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் அளித்த விளக்கம் வருமாறு:-

கே.பாலபாரதி: பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, பிஎட் கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்எட் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎட், எம்எட் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? என்று கேட்டார்.அமைச்சர் பி.பழனியப்பன்: இந்த பிரச்சனை எழுவதற்கான காரணங்களை விளக்கினார். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூர் 'பந்த்'தும் கேள்விக்குறியாகும் ஆசிரியர் - மாணவர் பந்தமும்!


பெரும்பாலும் 'பந்த்' எனப்படும் முழு அடைப்புகள் அரசியல் காரணங்களால் நடைபெறும். இம்முறை ஒரு பிரபல பள்ளியில் ஆறு வயது குழந்தைக்கு ஏற்பட்ட துயரத்திற்காக பெங்களுரில் பந்த் மேற்கொள்ளப்பட்டது. பாலியல் பலாத்கார விவகாரம் குறித்து பெற்றோர்கள் கொதித்தெழுந்து, பல பள்ளிகளில் ஆலோசனை நடந்து, அங்கு பெரும்பாலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பொதுவாக பல சிறு வயது பாலியல் பலாத்காரங்கள் வெளியில் வருவது இல்லை. அதைச் சொல்வதற்கான சூழ்நிலைகூட பெரும்பாலும் குழந்தைகளுக்கு வாய்ப்பது இல்லை.

சமூகம் பெண்களை போகப் பொருளாக நினைப்பது கொடுமை என்றால், அதை நாமும் கொண்டாடலாம் என்று ஆதிக்க மனதோடு பார்ப்பது இன்னும் கொடுமை.

எத்தனை கல்வி முறை மேம்பட்டாலும் வீட்டில் ஆண் குழந்தைகள் வளர்ப்பு மாற வேண்டும். தந்தை அதிகாரமும், ஆணவமுமாய் இருக்கும் தலைமுறை கொஞ்சம் மாறி வருகிறது என்றாலும், பெரும்பாலும் ஆண் ஆதிக்க குடும்பங்களே அதிகம்.

இந்தக் குழந்தை அதிகபட்ச குறும்பு செய்தாள், அதனால் பாலியல் பலாத்காரம் செய்தோம் என்று அந்த ஆசிரியர்கள் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள். ஆதிக்க மனதின் ஒரு வன்மம். எத்தனை வலித்து இருக்கும் அந்த குழந்தைக்கு. நினைத்து பார்க்க மனம் நடுங்கி தொலைக்கிறதே... நிகழ்வு என்றால் எத்தனை பயங்கரமானதாக இருக்கும்.

தோழி சொன்னார்... "எத்தனை வலிகள் பழகி கொண்டு போகிறோம். பிஞ்சுக் குழந்தைக்கு வலி கொடுப்பது என்றால், அது கொலையை விட பாதகமான செயல்."

எத்தனையோ ஏழைக் குழந்தைகள், நடுத்தர வர்க்க குழந்தைகள், பணக்கார வீட்டில் தனியே விடப்படும் குழந்தைகள் என சமூகம் அதன் கோரப் பற்களை குழந்தைகளிடம் காட்டுகிறது.

மகாபலிபுரத்தில் இது தனி தொழிலாக நடைப்பெறுகிறது எனக் கேள்வி. இணையத்தில் பெருக்கெடுத்தோடும் குழந்தைகளுக்கு எதிரான வக்கிரங்கள் இன்னொரு பக்கம். எங்கள் இணையக் குழுவில் முடிந்தவரை அதுபோன்ற பக்கங்களை ரிபோர்ட் செய்து முடக்குகிறோம். ஆனால், கணக்கில் இல்லாத வக்கிரங்கள் கொட்டிக் கிடக்கிறது.

எத்தனை வக்கிரங்கள் இணையத்தில் இருக்கிறது என்று தெரியாமலே பெற்றோர்கள் இருப்பது இன்னொரு விதம். மூன்றாம் வகுப்பு மாணவன், மாணவி கூட சில பாலியல் சந்தேகங்களை விவாதிப்பது தெரிய வருகிறது. பள்ளியில் சரியான முறையில் பாலியல் கல்வியும் அவசியமாகிறது.

இன்று வெளியில் சென்றபோது (பெங்களூரில்) பெரும்பாலான கடைகள் மூடியும் சில கடைகள் திறந்தும் இருந்தன. ஒரு செய்தியில் பந்த் வெற்றி என்று காலியான சாலையையும், கதவடைத்த கடைகளையும் காட்டலாம். இன்னொரு செய்தியில் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குறைந்த அளவே சென்ற வாகனங்களையும், திறந்து இருந்த உணவு விடுதிகளையும் காட்டலாம். உண்மையான செய்திகள் போய், செய்திகள் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வரும் காலமிது. திரிக்கப்பட்டு வெளிவருவதே இத்தனை இருக்கிறது.

காலம் படுவேகமாக நகர்ந்துகொண்டு இருக்கிறது. வக்கிர மனங்கள் அதிகமாகிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒருவரை பாலியல் பலாத்காரத்துக்கு பலியிடுகிறோம். நம் வீட்டில் நடப்பதுகூட அறியாமல் தூங்கிக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய சகோதரி, தாய், மனைவி.. ஏன் பாட்டிக்கூட இந்த வன்முறைக்கு பலியாகலாம். ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வு பெற வேண்டிய நேரம்.

டெல்லி சம்பவம் போல இதையும் கடக்கப் போகிறோம். இதை சமூக விழிப்புணர்வாக அரசாங்கம் கொண்டு செல்லப்போவது இல்லை.

எய்ட்ஸ், குடும்பக் கட்டுப்பாடு போல இதிலும் விழிப்புணர்வு கொண்டு வந்து, இன்னும் தண்டனைகள் கடுமை ஆக்கலாம். குழந்தைகளை தொட்டால் தடா, பொடா போல ஒரு சட்டத்தில் உள்ளே போட வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு புரிதலை ஏற்படுத்தலாம். பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலர்களை அதிகப்படுதலாம். இணக்கமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

என் படித்த தோழிகூட வெளியூரில் பெண்ணை படிக்க அனுப்ப யோசனை செய்கிறாள். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் பறிபோகும் கொடுமையும் இந்தச் செய்திக்கு பின் இருக்கிறது. சில வெளிநாடுகளில் பெண்கள் இந்தியாவில் தனியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறதாம்.

வெளிநாட்டில் என் தோழியின் நண்பரிடம் "இதுவரை எத்தனை பெண்களை பலாத்காரம் செய்திருக்கீங்க?" என்று டாக்சி டிரைவர் கேட்டாராம். இந்திய ஆண் ஒவ்வொருவரும் ரேப் செய்வார்கள் என்று புரிதலாம் அவர்களுக்கு. எப்படிப்பட்ட நல்ல பெயர் வாங்கி வைத்து இருக்கிறோம்.

இப்போது சில பள்ளிகளில் 'நோ டச்' பாலிசி கொண்டு வந்து இருகிறார்கள். ஆர்வமாக ஐந்து வயது குழந்தை, தன் ஆசிரியரை அணைத்துக்கொள்ள முடியாது. ஆசிரியர் - மாணவர் பந்தமே கேள்விக் குறியாகிறது இங்கே. இனி கண்காணிப்பு கேமராக்களின் மேற்பார்வையில் வகுப்புகள் செயல்படும். இயல்பு பறிபோகும். இன்னும் ஆசிரியர் மாணவர் உறவு சீர்குலையும்.

பந்த் இன்று முடியும். எதிர்ப்பு தெரிவித்தாகிவிட்டது. சரி, நாளை என்ன செய்ய போகிறோம்... இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க?

கிர்த்திகா தரன், பெங்களூர். - தொடர்புக்கு kirthikatharan@gmail.com

விண்ணப்பங்கள் அனுப்பும் போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது


விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ்நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது.இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமர் பதவி ஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிற விதத்தில்அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில்ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 4–ந் தேதி தன்னை சந்தித்தபல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போதும் அவர், பொதுமக்கள் பலன் அடையத்தக்க விதத்தில்அரசு நடைமுறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக விவாதித்தார்.

சான்றளிப்பு முறை
அந்த வகையில், தற்போது மாணவர்கள், பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளில், அரசு நிறுவனங்களில்வேலை பெறவும், கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும், வேலை வாய்ப்பு தேர்வுகள் எழுதுவதற்கும்விண்ணப்பிக்கிறபோது, அத்துடன் கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்போன்றவற்றின் ஜெராக்ஸ் நகல்களை 'கெஜட்டட் ஆபிசர்ஸ்' என்று அழைக்கப்படுகிற அரசிதழ் பதிவு பெற்றஅதிகாரிகளின் சான்றளிப்பு பெற்று இணைக்கிற நடைமுறை உள்ளது. இப்படி சான்றளிப்பு பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தேடி அலைவதில் பொதுமக்களுக்கு நேரமும்,பயணச்செலவும் விரையமாகிறது. அதிகாரிகளுக்கு நேரம் விரையமாகிறது. இந்தசான்றளிப்பு முறையை முடிவுக்கு கொண்டு வந்து, நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்பி அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளார். சுய சான்றளிப்பு அந்த வகையில் இனி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப்பெற்று பயன்படுத்துவதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களே தங்களது சான்றிதழ் நகல்களை சுயசான்றளிப்பு செய்யும் நடைமுறை வருகிறது. நேர்முகத்தேர்வு போன்ற கடைசி கட்ட நடவடிக்கையின்போது,அசல் சான்றிதழை கொண்டு வரச்செய்து உறுதி செய்துகொள்ளப்படும். இந்த நடைமுறையை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

இதற்கான வழிவகைகளை செய்யுமாறு மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்களை பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தவறு செய்தால் நடவடிக்கை இந்த சுய சான்றளிப்பு முறையினைப் பயன்படுத்தி யாரேனும் தவறாகவோ, பொய்யாகவோ சுயசான்றளிப்பு செய்தால், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.

தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. 5000லிருந்து 7000ஆகிறது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு
இரண்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

source-THANTHI TV

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பிற்கு புது பாடத்திட்டம்... தாமதம்! 9 ஆண்டுகளாக பழைய புத்தகமே தொடரும் அவலம்


தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் காணப்படுகிறது.
கடந்த, 2006ல், பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டில், பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அமல்படுத்தப்பட்டன. ஒன்பது ஆண்டுகள் முடியும் நிலையில், இன்னும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தவில்லை.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டங்களைஅமல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

அரசின் ஒப்புதலுக்கு...:

இதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்து முடித்ததும், தமிழக அரசின் ஒப்புதலுக்கு, கல்வித் துறை, கோப்பை அனுப்பியது. பல மாதங்கள் ஆகின்றன; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.நடப்பு கல்வி ஆண்டில் (2014 - 15), பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டு (2015 - 16), பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என, முதலில் அறிவிக்கப்பட்டது.பணிகள் முடியாததால், அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16), பிளஸ் 1 பாடத் திட்டமும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2016 - 17) பிளஸ் 2 பாடத்திட்டமும்அறிமுகப்படுத்தப்படும் என, பின்னர் அறிவிக்கப்பட்டது. வரைவு பாடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின், பாடங்களை எழுதுவதற்கான குழுக்களை ஏற்படுத்தி, பாடங்கள் எழுத வேண்டும். இதற்கு, ஒரு ஆண்டு முழுமையாக தேவைப்படும்என, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இது குறித்து, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்த ஆசிரியரில், ஒருவர் கூறியதாவது:பாடத் திட்ட தயாரிப்பு பணிகளை, மற்ற பணிகளைப் போல், வேகமாகச் செய்ய முடியாது. சிறிய தவறுகள் வந்தாலும், அது, மாணவர்கள் மத்தியில், தவறான கருத்துக்களை கற்பிப்பது போல் ஆகிவிடும்.வரைவு பாடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், ஆறு மாதங்களுக்கு மேலாக இழுபறி உள்ளது. இதைப் பற்றி, முதல்வரிடம் எடுத்துக் கூற, அதிகாரிகள் தயங்குகின்றனர். முதல்வரிடம், விவரத்தை தெரிவித்தால், அவர், உடனடியாக ஒப்புதல்அளிப்பார்.

நெருக்கடி கொடுத்தால்...:

பாடத் திட்டங்களை எழுத, குறைந்தபட்சம், ஒருஆண்டு தேவைப்படும். எழுதி முடித்த பின், பிழைகள் பார்ப்பது உள்ளிட்ட, பல பணிகள் உள்ளன. எனவே, இனிமேல், தமிழக அரசு ஒப்புதல் அளித்தாலும், எங்களது பணியை,முழுமையாகச் செய்ய முடியாது.நெருக்கடி கொடுத் தால், புத்தகங்கள், முழு தரத்துடன் வெளி வராதுதமிழக அரசு,போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, போதிய கால அவகாசம் தர வேண்டும். அப்போது தான், தரமான பாடத் திட்டங்களை தயாரிக்க முடியும்.இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.திட்டமிட்டபடி, நடப்பாண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்தாமல், கால தாமதம் செய்வதால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்குஇலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில்தொடங்குகிறது


அரசு, அரசு உதவி பெறும் இலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் தொடங்குகிறது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசக்காலணிகள், புத்தகப் பைகள் ஆகியவை இந்த ஆண்டு முதல் கடுமையான தரப்பரிசோதனைக்கு உள்படுத்தப்பட உள்ளன. இவற்றின் தரத்தை தனியார் ஆய்வகங்கள் பரிசோதித்து வந்த நிலையில், முதல்முறையாக இலவசப் பொருள்களின் தரத்தைப் பரிசோதிக்கும்பொறுப்பு மத்திய அரசு நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய பிளாஸ்டிக் பொறியியல், தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்),காலணிகள் வடிவமைப்பு, மேம்பாட்டு நிறுவனம் (எஃப்.டி.டி.ஐ.) ஆகியமத்திய அரசு நிறுவனங்கள் ஒவ்வொரு நிலையிலும் இந்தப் பொருள்களின்தரத்தை உறுதிசெய்யும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. 

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம்வகுப்பு வரை படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு ஒரு ஜோடி இலவசக்காலணிகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் ரூ.120 கோடியில்செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல், ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார்ஒரு கோடி மாணவர்களுக்கு இலவசப் புத்தகப் பைகள் ரூ.150 கோடியில் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு வரை இலவசக் காலணிகள், புத்தகப்பைகளைப் பரிசோதனை செய்யும் பொறுப்பு தனியார் ஆய்வகங்களிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பொருள்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நிறுவனங்களிடம் தரத்தைப் பரிசோதிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக வட்டாரங்கள்கூறியது: இலவசக் காலணிகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கான ஆணைகள் 6நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காலணிகளின் தரத்தைப்பரிசோதிக்கும் பொறுப்பு காலணி வடிவமைப்பு,மேம்பாட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், காலணிகள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளுக்குச் சென்று ஒவ்வொரு லட்சம் காலணிகளிலும் சில ஜோடி காலணிகளை எடுத்துப் பரிசோதிப்பார்கள். இதில் ஏதேனும்குறைபாடுகள் கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட அந்தக் காலணியின் பிரிவில்(பேட்ச்) உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துக் காலணிகளும் நிராகரிக்கப்படும். 

ஒவ்வொரு பெட்டியிலும் அந்தக் காலணி விநியோகிக்கப்பட வேண்டியமாவட்டம், பேட்ச் எண் உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும்.பரிசோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்ட காலணிகள் போக மீதமுள்ளகாலணிகள் உள்ள பெட்டிகளில் எஃப்.டி.டி.ஐ. பரிசோதித்ததற்கானஹாலோகிராம் குறியீடு பொறிக்கப்படும். இந்தக் குறியீடு இடப்பட்டபெட்டிகள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்தான் பிரிக்கப்பட வேண்டும் என்கிறஉத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. 

காலணி விநியோகத்துக்குப் பிறகும் பரிசோதனை: மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளுக்கு சிறிய, நடுத்தர, பெரியவகை காலணிகளில் வகை வாரியாக 5 ஆயிரம்காலணிகளுக்கு ஒரு ஜோடி காலணியை எடுத்து சென்னைக்கு அனுப்புமாஅந்தக் காலணிகள் மீண்டும் எஃப்.டி.டி.ஐ. நிறுவனத்துக்கு அனுப்பப்படும். காலணிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்தப் பிரிவில் உள்ளஅனைத்துக் காலணிகளையும் தயாரிப்பாளரே மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தகப் பைகள்: அதேபோல், புத்தகப் பைகளின் தரத்தை மத்திய பிளாஸ்டிக்பொறியியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகள் பரிசோதிப்பார்கள்.இந்தப் பைகளில் உள்ள இழைகளின் தரத்தை அறிய,அவற்றை அழுத்தத்துக்கு உள்படுத்துதல், எரித்தல் என பல்வேறு வகைகளில்சோதிக்கப்படும். பைகளில் ஏதேனும் குறை இருந்தால் அந்தப் பிரிவில் உள்ள புத்தகப் பைகள்அனைத்தும் நிராகரிக்கப்படும். காலணிகளில் இருக்கும் அனைத்துப்பரிசோதனைகளும் புத்தகப் பைகளுக்கும் பொருந்தும்.

கலர் பென்சில்கள்,கிரேயான்கள் உள்ளிட்டவற்றுக்கும் இதேபோன்ற சோதனை நடைமுறைகள்கடைப்பிடிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில்தொடங்குகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் விநியோகம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், புத்தகப் பைகள்விநியோகமும் அக்டோபருக்குள் முடிவடையும் என அந்த வட்டாரங்கள் 
தெரிவித்தன.