திருச்சி பெருநகர மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் ராஜராஜன் மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர் வோர் செல்போன் எண்ணை பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மின் நுகர்வோர் மின் கட்டணங்களை இணைய தள வங்கி சேவை மூலமா கவும், செல்போன் மெசேஜ் மூலமாகவும், இந்திய தபால் அலுவலகம் மூலமாகவும் மற்றும் வங்கி கவுன்டர் மூலமாகவும் செலுத்தலாம். மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தில் செல்போன் எண்ணை பதிவு செய்யவிருக்கின்ற மின் நுகர்வோர்களுக்கு ‘மதிப்பு கூட்டு சேவையாக‘ மெசேஜ் மூலமாக அவர்களுடைய மின் கட்டணம் மற்றும் கட்டணம் செலு த்த கடைசி நாள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப் படும். ஆகையால், மின் நுகர்வோர்கள் இவ்வசதியை பெற தங்களுடைய செல்போன் எண்ணை தங்கள் பகுதி பிரிவு அலுவலகங்களை அணுகி பதிவு செய்து பயனடையு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மின் வாரிய இணையதளத்தை பார்க் கவும். இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment