Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 12 January 2014

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது

 டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. முதுநிலை பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வின் இரண்டாவது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தாவரவியல், வரலாறு, வணிகவியல், வேதியியல், இயற்பியல் உட்பட 5  பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் ஒன்று தாள் இரண்டு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சாரிபார்க்கும் பணிகள் வரும் 20ம் தேதி முதல் 28 வரை  தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதங்கள், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு இணைய தளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 8 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதை விட 2400 கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment