Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 21 January 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளின் இன்றைய (20.01.14) நிலை குறித்த விரிவான செய்தித் தொகுப்பு...


முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் (20.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தன.

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக நாளை முதல்(21.01.14) தனியாக வெவ்வேறு நாட்களில் அதாவது முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு ஒருநாளிலும், வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வுதாள் 1 மற்றும் தாள் 2 வழக்குகளை படியலிட நீதியரசர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பு காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 வழக்கின் மனுதாரர்கள் பலருக்கு மதிப்பெண் கூடுதலாக கிடைத்து 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் .அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளதால், அவர்களின் ரிட் மனுக்களை வாபஸ் பெறவிரும்புவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.எனவே அவர்களின் வழக்குகள் நாளை (21.01.14 ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thanks To,
Velan Thangavel

No comments:

Post a Comment