சத்துணவு மையங்களில் 25 குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால் அந்த மையங்களை அருகில் உள்ள மையங்களுடன் இணைத்து விடுவது என்று மாவட்ட நிர்வாகம் முடி வெடுத்துள்ளதாக கூறி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் திருப்பூர் மாவட்டம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் பால்ராஜ், மாநில தலைவர் பழனிச்சாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
பணி இழப்பு
அப்போது, 25 குழந்தைக ளுக்கு கீழ் உள்ள சத்துணவு மையங்களை அருகில் உள்ள மையங்களோடு இணைப்பதால் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிழக்கும் சூழ்நிலை நேரிடும். குறித்த நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் சிரமம் ஏற்படும். ஒரு மையத் தில் இருந்து அடுத்த மையத்திற்கு சூடாக சாப்பாடு, சாம்பார், முட்டை போன்ற வேக வைத்த பொருட்களை எப்படி எடுத்து செல்வது? ஆகவே மையங்களை இணைக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் உள்பட 13 ஒன்றியங் களில் இருந்து ஆயிரக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளா ளர் முத்தமிழ்ராஜ் நன்றி கூறினார்.
பின்னர் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment