Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 5 January 2014

இம்மாதம் 'குரூப் 4' தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பேட்டி

''இம்மாதம் இறுதியில் 'குரூப் 4' தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,'' என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் பதிவுத்துறை அலுவலர் சங்க இணைய தளம் துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நேர்மையாகவும், வெளிப்படையான நிர்வாகத்துடன் பணிகளை மேற்கொள்கிறது. குரூப் 4 தேர்வை 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகளை வெளியிட மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுத்துறையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குரூப் 1 தேர்வு குறித்து விளம்பரம் வெளியிட்டோம். ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதன் முதற்கட்ட தேர்வு ஏப்.,26ல் நடக்கும், என்றார்.

No comments:

Post a Comment