
எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்று ஒரே இடத்தில் 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் கராத்தே பயிற்சி செய்தனர்.
கராத்தே பயிற்சி
சென்னை திருவல்லிகேணியில் உள்ள என்.கே.டி. உயர்நிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பு முதல் 11–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து கடந்த 6 மாதங்களாக ‘பொபுக்காய்’ கராத்தே பள்ளி ஆசிரியர் சுந்தர் இலவச பயிற்சி கொடுத்தார்.
6 மாத கால பயிற்சியை முடித்த 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை நேற்று செய்து காண்பித்து அசத்தினர்.
மனதைரியம்
இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு போக்குவரத்து துறை போலீஸ் துணை கமிஷனர் எஸ்.லட்சுமி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த தற்காப்பு பயிற்சி மூலம் அவர்களுக்குள் இருக்கும் மனதைரியத்தை வெளிக்கொண்டு வர முடியும். இதே போல் அனைத்து பள்ளிகளிலும் செய்தால் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளரும்’ என்றார்.
கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட மாணவி லட்சுமி கூறும்போது, ‘எங்களுக்கு கடந்த 6 மாதங்களாக இந்த பயிற்சியை கொடுத்தனர். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுக்குள் புதைந்து கிடைந்த தைரியம் இப்போது வெளியே தெரிகிறது’ என்றார்.
No comments:
Post a Comment