Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 21 January 2014

அரசு திட்டத்தால் 510 குழந்தைகள் கேட்கும் திறன் பெற்றனர்

காது கேட்ககாத, 510 குழந்தைகளுக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம், தக்க அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு காது கேட்கும் திறன் உருவாகி உள்ளதாக, மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர், மணிவாசன் தெரிவித்தார்.

சென்னை ஸ்ரீராமச்சந்திரா பல்கலையில், காக்ளியர் அறுவைச் சிகிச்சை திட்டத்தின், 8ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. அதில், மணிவாசன் பேசியதாவது: தமிழகத்தில், இரண்டு லட்சத்திற்கும் மேலான குழந்தைகளுக்கு பிறவியில் செவித்திறன் பாதிப்பு உள்ளது. நெருங்கிய உறவில் திருணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கேட்கும் திறன் பாதித்த குழந்தைகளுக்கு ஒரு வயதிலேயே,'காக்ளியர்' அறுவைச் சிகிச்சை செய்தால், கேட்கும் திறனை முழுவதும் பெற முடியும். இந்த சிகிச்சைக்கு, எட்டு லட்சம் ரூபாய் செலவாகிறது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டின் கீழ், இந்த சிகிச்சை அளிக்க அனுமதித்த ஆறு மாதத்தில், 510 குழந்தைகளுக்கு, வெற்றிகரமாக இந்த சிகிச்சை தரப்பட்டு, கேட்கும் திறன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment