Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 17 January 2014

மாணவர்களை தடம்மாற செய்யும் 9குழி சூதாட்டம்: போலீஸ் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


திருச்சி விமானநிலையம் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் மாணவர்களை தடம் மாற செய்யும் 9 குழி சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
திருச்சி விமானநிலை யம் அருகே உள்ள செம் பட்டு, குடிதெரு, அய்யர் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொழிற்பேட்டை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதி யில் உள்ள தொழிற்பேட்டை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு ஆர்டர் வராததால் ஏராளமான குடும்பங்கள் கிடைத்த வேலை செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 
தற்போது பணம் வைத்து விளையாட கூடிய மங்காத்தா, ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு போலீ சாரின் கெடுபிடி அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் வேலை க்கு செல்லாத நேரங்களில் 4 சிறிய குண்டு மற்றும் 1 பெரிய குண்டை வைத்து தரையில் 9 குழிகள் பறித்து விளையாடும் 9 குழி ஆட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இத னால் பள்ளி மற்றும் கல்லூ ரிக்கு செல்லும் மாணவர் கள் கூட சில நேரங்களில் பாடம் கற்பிக்க செல்லாமல் 9 குழி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சூதாட்டத்தில் விளையாடுபவர்கள் ஒரு ஆட்டத்திற்கு ரூ.100 முதல் 500 வரை பணயமாக வைக்கப்படுகிறது என்றால் பாருங்கள். சில நேரங்க ளில் தகராறு நடப்பதாக வும் கூறப்படுகிறது. 
இதனால் பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி மாணவர்களும் தடம் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடி க்கை மேற்கொள்ள வேண் டும் என்பது அப் பகுதி சமூக ஆர்வலர்களின் கருத் தாக உள்ளது.
இதுகுறித்து செம்பட்டு பகுதியை சேர்ந்த சமூக ஆர் வலர் கூறுகையில், பொழுது போக்கிற்காக விளையாடப்பட்ட 9 குழி ஆட்டம் தற் போது பணம் வைத்து விளை யாட கூடிய அள விற்கு சென்றுவிட்டது. மேலும் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்க ளில் இவர்களுடைய ஆட்டம் சொல்ல வார்த்தைகள் இல்லை. எனவே இளைஞர் கள் தடம்மாறி செல்லும் முன்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு இந்த சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment