ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முன் வராதது குறித்து, தேசிய ஆதிதிராவிட ஆணையத்திடம், பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, புகார் அளித்துள்ளது. அந்த அமைப்பின் பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு, அளித்துள்ள புகார் மனுவில் கூறிப்பிடப்பட்டு உள்ளதாவது: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) இட ஒதுக்கீட்டு பிரிவைச் சேர்ந்த தேர்வர்கள், 60 சதவீதத்திற்கும் குறைவாக, மதிப்பெண் பெற்றிருந்தாலும், மதிப்பெண் தளர்வு வழங்குகிறது.
இட ஒதுக்கீட்டு பிரிவினர், மதிப்பெண் சலுகை பெற, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்க, அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், டி.ஆர்.பி., அனுமதிக்கவில்லை. இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுவரை நடந்த, டி.இ.டி., தேர்வுகளில், மதிப்பெண் சலுகை அளிக்கப்படவில்லை. "இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் தளர்வு வழங்க முடியாது' என, தமிழக அரசு, எந்த முடிவும் எடுக்கவில்லை; அதற்கான அரசாணையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment