Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 20 January 2014

சென்னை புத்தக கண்காட்சியில் அலை மோதியது மக்கள் கூட்டம் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி சென்றனர் மாணவர்கள்

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில்,  37வது சென்னை புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் குவிக்கப்பட்டு ள்ளன. 700 அரங்குகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் சலுகை விலையில் விற்கப்படுவதால், சென்னைவாசிகள் மட்டுமி ன்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்த பலரும் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். நாளை மறுநாளோடு கண்காட்சி நிறைவு பெறுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் காணப்பட்டது.  பெற்றோருடன் வந்த மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர். தினகரன் குழுமம் சார்பில் பங்கு பெற்றுள்ள சூரியன் பதிப்பகத்தில் (அரங்கு எண்.22) முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு,  மாநில சுயாட்சி உள்பட பல புத்தகங்களை வாசகர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்

No comments:

Post a Comment